தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் புதிய திட்டம் அறிமுகம்; தேதி குறித்த தமிழக அரசு!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை திருப்பித் தந்தால் 10 ரூபாய் வழங்கும் திட்டம் ஏப்ரல் முதல் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். தற்போது 9 மாவட்டங்களில் முழுமையாகவும், 7 மாவட்டங்களில் பகுதி வாரியாகவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Feb 5, 2025 - 15:39
 0  0
தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் புதிய திட்டம் அறிமுகம்; தேதி குறித்த தமிழக அரசு!!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் புதிய திட்டம் அறிமுகம்.! தேதி குறித்த தமிழக அரசு

தமிழகத்தில் நாளுக்கு நாள் மது விற்பனை அதிகரித்து வருகிறது.. அந்த வகையில் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளது. நாளொன்றுக்கு 100 முதல் 120  கோடி ரூபாய் வரை மதுபானம் விற்பனை நடைபெறுகிறது. இந்த வருமானம் தான் தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த பெரிதும் உதவியாக உள்ளது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. அதன் படி மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் விலை கேட்பதை கட்டுப்படுத்தும் வகையிலும், கள்ள சந்தையில் விற்பனை செய்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

இதே போல டாஸ்மாக் மதுபான பாட்டில்களை குடிமகன்கள் குடித்துவிட்டு  பல்வேறு இடங்களில் தூக்கி எரியும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சுற்று சூழல் மாசு அடைகிறது. மேலும் வனப்பகுதிகளில் பாட்டில்களை உடைப்பதால் விலங்குகளின் உயிருக்கும் ஆபத்து உருவாகிறது. இதனை கருத்தில் கொண்டு நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பாட்டில்களை திருப்பி கொடுத்தால் 10 ரூபாய் பணத்தை டாஸ்மாக் கடை வழங்கும். இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்துவது தொடர்பான முக்கிய அறிவிப்பை நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும  வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகள்  சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது சுற்றுலா தளங்களில் உள்ள மதுபானக்  கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறுவது தொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் அறிக்கை அளித்தது.  

அதில், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 7 மாவட்டங்களில் பகுதிவாரியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மதுபான  பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் 97 சதவிகித பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும், பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் வருகிற ஏப்ரல் முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை வரவேற்ற நீதிபதிகள், மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்துடன் பாட்டில்களின்  மூடியை மாற்றுவதா? அல்லது திரும்ப பெறுவதா? என தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 3ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். இந்த நிலையில் சுற்றுலா பகுதி உள்ள மாவட்டங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த மதுபான பாட்டில்களை திருப்பி கொடுத்தால் 10 ரூபாய் கொடுக்கும் திட்டம் இனி தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படுவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow