பாத்ரூமில் டூத் பிரஷ்ஷை வைக்க கூடாது? ஏன் தெரியுமா?

நாம் பயன்படுத்தக்கூடிய டூத் பிரஷை பாதுகாப்பாக வைக்க வேண்டியது அவசியம். ஏனெனில் டூத் பிரஷ்ஷில் பாக்டீரியாக்கள் தொற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இந்த டூத் பிரஷை பலரும் சுகாதாரமாக வைத்துக்கொள்வதில்லை.

Apr 15, 2025 - 16:48
 0  2
பாத்ரூமில் டூத் பிரஷ்ஷை வைக்க கூடாது? ஏன் தெரியுமா?

டூத் பிரஷை நாம் பயன்படுத்திய பிறகு அதை அப்படியே பாத்ரூமில் வைத்து விடுகிறோம். இதனால் அந்த டூத் பிரஷில் பாக்டீரியா தொற்று பரவும் அபாயம் உள்ளது. அதனை அப்படியே பயன்படுத்தும் போது பாக்டீரியா தொற்றுகள் நமக்கும் பரவுகிறது. எனவே பிரஷ்ஷை பயன்படுத்திய உடனே வெளியில் எடுத்து வைப்பது நல்லது.

 

டூத் பிரஷ்ஷை ஒரு கவரில் போட்டு பத்திரமாக மூடி வைக்கலாம் அல்லது தற்போது சந்தைகளில் டூத் பிரஷ்கள் மூடிகளுடன் கிடைக்கின்றன அவற்றையும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது பாக்டீரியா தொற்றுகள் அதன் மீது படுவது தடுக்கப்படுகிறது.

ஒரு பிரஷ் உடன் மற்றொரு பிரஷ் உரசும் போது அதில் உள்ள பாக்டீரியாக்கள் இன்னொன்றில் பரவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆகையால் உங்களது டூத் பிரஷ்களை தனித்தனியாக வைத்துக் கொள்வது நல்லது.

தேய்ந்து போன டூத் பிரஷை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது அது உங்கள் பற்களை சுத்தம் செய்யாது. இதனால் வாய், துர்நாற்றம், பூஞ்சை, பாக்டீரியா போன்ற தொற்றுகள் ஏற்படும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நீங்கள் பயன்படுத்தக்கூடிய டூத் பிரஷை மாற்றியே ஆக வேண்டும். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.