அப்பா
தமிழ் கவிதைகள்

தூரத்தில் இருக்கும் காட்சியை காட்ட
தோள் மீது சுமந்து காட்டினாய்
கஷ்டப்படாத எதிர்காலத்தை எதிர்நோக்க
கடிகாரமாய் உழைத்தாய்
வார்த்தைகளில் காட்டாத அன்பை
வாழ்ந்து காட்டினாய்
வெளிப்படையாய் தெரியவில்லை எனினும்
வெளிப்படுகிறது உன் பாசம்
குடும்பத்தையே தாங்கி பிடிக்கும் உன் நேசம்
வாழ்க்கை தடுமாறி போனாலும்
கரம்பிடிக்கும் முதன்மனிதன் நீயே அப்பா
What's Your Reaction?






