லவ் லெட்டர் ரெசிபி : காதல் துணையை ஈர்க்க இதை செஞ்சு கொடுத்து அசத்துங்க
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர் ஷபானா தனது காதல் கணவருக்காக செய்த லவ் லெட்டர் ரெசிபி நடுவர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த லவ் லெட்டர் ரெசிபி கேரள உணவாகும். லவ் லெட்டர் ரெசிபியை எப்படி செய்வது என பார்ப்போம்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புதிய உணவுகளை தெரிந்து கொண்டு அதை ருசிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்கிறது. இந்த வாரம் போட்டியாளர் ஷபானா காதல் கணவருக்காக லவ் லெட்டர் ரெசிபி செய்திருந்தார். லவ் லெட்டர் பார்ப்பதற்கு மஞ்சள் நிற ஸ்வீட் போல இருந்தது. முதல் முறையாக காதல் கணவருக்கு செய்து கொடுத்த உணவு லவ் லெட்டர் என ஷபானா குறிப்பிட்டார். கேரள உணவான லவ் லெட்டருக்கு வேறு பெயர்களும் உண்டு. கேரளாவில் இதை காலை உணவாகவும், தின்பண்டமாகவும் சாப்பிடுகின்றனர். இந்த லவ் லெட்டர் எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுங்கள்.
Directions
1. லவ் லெட்டர் செய்ய தேவையானவை
- மைதா மாவு
- தேங்காய் துருவல்
- நெய்
- தண்ணீர்
- உப்பு
- ஏலக்காய் தூள்
- மஞ்சள் தூள்
- சர்க்கரை
- உலர் திராட்சை
- முந்திரி

2. லவ் லெட்டர் செய்முறை
- லவ் லெட்டர் ரெசிபி செய்ய முதலில் மாவு தயாரிக்க வேண்டும். அதற்கு மிக்ஸி ஜாரில் ஒரு முட்டை, ஒன்றரை கப் மைதா மாவு, ஒரு கப் தண்ணீர், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், கால் டீஸ்பூன் உப்பு போட்டு அரைக்கவும்.
- மைதாவுக்கு பதில் கோதுமை கூட பயன்படுத்தலாம். மைதா அதிக சுவை கொடுக்கும். லவ் லெட்டர் மஞ்சள் நிறத்திற்கு வருவதற்கு மஞ்சள் தூள் போடுகிறோம். தேவைப்பட்டால் மஞ்சள் தூள் போடவும்.
- மிக்ஸியில் போட்டு தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுக்கவும். விஸ்க் வைத்து கூட அடித்து மாவு தயாரிக்கலாம்.
- பேனில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி உருக்கி சூட்டை குறைத்து பத்து முந்திரி பொடியாக நறுக்கி போடவும். அதோடு உலர் திராட்சையும் சேர்க்கலாம்.
- முந்திரி வறுத்து பொன்னிறத்திற்கு மாறியதும் கால் கப் சர்க்கரை, ஏலக்காய் தூள் கொஞ்சம், ஒன்றரை கப் தேங்காய் துருவல் சேர்த்து கலந்துவிடவும்.
- ஒரு நிமிடம் கழித்து அடுப்பை ஆஃப் செய்துவிடுங்கள். இதை நன்கு கலந்து மாவை வேகவைத்து தோசை போல் சுட்ட பிறகு ஸ்டப்ஃபிங் செய்ய வேண்டும்.
- இப்போது பேனில் தோசை சுட்டு எடுப்பது போல மாவை ஊற்றி இரண்டு புறமும் வேகவிட்டு எடுங்கள். அதில் ஒரு ஸ்பூன் ஸ்டப்ஃபிங் வைத்து மடித்து செவ்வக வடிவதத்திற்கு மாற்றவும்.
இதை காதல் துணையிடம் கொடுக்கும் போது மேலே கொஞ்சம் தேன் ஊற்றி கொடுங்கள். அவ்வளவு ருசியாக இருக்கும்.

What's Your Reaction?






