காதல் கவிதைகள் தமிழ் | Kadhal Kavithaigal in Tamil

காற்றோடு
கலந்து வரும்
உன் நினைவுச்சாரலில்
நானும்
நனைகின்றேன்
உன்னைக் காண…
உன்னருகில்
உன் நினைவில
மட்டுமே
என் மகிழ்ச்சியெல்லாம்…
இளைப்பாற
இடம் கேட்டேன்
இணைந்து வாழும்
வரம் கொடுத்தான்
இதயத்தில்…
ஓசையின்றி
பேசிடுவோம்
விழிமொழியில்…..
கண் அசைவில்
காதல் சொல்லவா
என் கண்ணே…
விடைபெறும்
போதெல்லாம்
பரிசாக்கி
செல்கிறாய்
அழகிய
நினைவுகளை …
அடைமழையில்
தப்பித்து
உன் கனல்
பார்வையில்
சிக்கிக்கொண்டேன்
உன்னை
நினைப்பதால்
என்னை
மறப்பதுதான்
காதலா!
ஆயுள் முழுதும்
வாழ்வேன்
என்னை மறந்து…
தழுவிச்செல்லும்
தென்றலாய்
மனதை வருடிச்செல்கிறது
ஒன்றாக
நாம் இருந்த
தருணங்கள்…
இடைவெளிவிட்டு
நீ இருந்தாலும்
நம் இதயங்கள்
இணைந்தே
பயணிக்கின்றது
என் கவலைகளுக்கு
மருந்தாகிறாய்
உன் கவலைகளை
மறைத்து…!
நெற்றியில்
திலகமிட்டுக்கொள்ள
வரம் தந்தவனுக்கு
அன்புப் பரிசாய்
அவன் நெற்றியில்
இதழில் திலகம்
சலிக்காத ரசணைகள்
தூரத்து நிலவும்
என் அருகில்
நீயும்…
தனிமையும்
பிடித்துப்போனது
உன் நினைவுகளால்
மனதோடு மாலையாய்
என்னை சூடிக்கொள்
உன் உள்ளத்தில்
உதிராத மலராய்
என்றும் நானிருப்பேன்…
What's Your Reaction?






