மாணவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்

பொழுதுபோக்கு விடயங்களுள் ஒன்றாக காணப்படும் வாசிப்பு ஒருவருடைய வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. வாசிப்பு ஒருவனின் அறிவின் வளர்ச்சியின் தூண்டுகோலாக அமைகிறது என்பது நாம் யாவரும் அறிந்த ஒரு விடயமாகும்.

Jul 10, 2025 - 11:44
 0  1

1. குறிப்பு சட்டகம்:

  1. முன்னுரை
  2. வாசிப்பின் பயன்கள்
  3. திருக்குறளின் அமைப்பு
  4. திருக்குறளின் தனிச்சிறப்பு
  5. முடிவுரை

2. முன்னுரை:

முன்னுரை:

உலகின் சிறந்த நூல்களில் ஒன்றாக காணப்படும் திருக்குறளானது ஒரு சிறந்த புத்தகமாகும். இந்தப் புத்தகத்தில் பல்வேறு அறக்கருத்துக்கள் சிறந்த முறையில் கூறப்பட்டுள்ளது.

இதனை வாசிப்பதன் மூலம் பல்வேறு தத்துவ கருத்துக்களை பற்றி நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.

மாணவர் ஒருவர் திருக்குறளை வாசிப்பதன் மூலம் அவன் இந்த சமூகத்தில் எவ்வாறு வாழ வேண்டும், வாழ்வதன் அவசியங்கள், பயன்கள் என்பவற்றை சிறப்பாக அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.

3. வாசிப்பின் பயன்கள்:

கல்வி பயிலும் மாணவர்களிடையே காணப்பட வேண்டிய முக்கிய பண்பாக மற்றும் ஒரு பொழுதுபோக்காக புத்தக வாசிப்பு என்பது இன்றியமையாத ஒரு காரணியாக அமைந்து காணப்பட வேண்டும்.

அவ்வாறு காணப்படுவதன் மூலம் அவர்கள் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். ஒரு மனிதனை பூரணத்துவம் அடைய செய்வது வாசிப்பு ஆகும்.

தொடர்ந்து புதிய புத்தகங்களை வாசிப்பதன் மூலம் ஒருவருடைய மூளையின் வளர்ச்சி வீதம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாது அவர்களுடைய பொறுமை குணமும் மேலோங்குகிறது.

சிந்திக்கும் திறன் பரவலடைந்து அனைவரிலும் வேறுபட்ட முறைகளில் சிந்திக்க உதவுகிறது. பல்வேறு துறை சார்ந்த அறிவுகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாகவும் உள்ளது.

4. திருக்குறளின் அமைப்பு:

திருக்குறளானது திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. இது “உலகப் பொதுமறை” என உலக மக்கள் அனைவராலும் சிறப்பாக அழைக்கப்படுகிறது. இது சங்கமருவிய காலத்தில் தோற்றம் பெற்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக காணப்படுகிறது.

இரண்டு அடிகளையும், ஏழு சீர்களையும் கொண்டு வெண்பா யாப்பு வகைப்பாவில் அமைந்த நூலாக காணப்படுகிறது. தொல்காப்பியர் குரல் வெண்பாவை “குறுவெண்பாட்டு” என்று  கூறுகின்றார். இது அற நூலாகவும், அறிவு நூலாகவும், நீதி இலக்கியமாகவும் காணப்படுகிறது.

திருக்குறளானது அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நூலாகும்.

மேலும், இது அறத்துப்பால்(38), பொருட்பால்(70), காமத்துப்பால்(25)  எனும் பெரும் பிரிவுகளை கொண்டமைந்துள்ளது. திருக்குறளானது,  மொத்தமாக 133 அதிகாரங்களையும், 1330 ஈரடி செய்யுட்களையும் கொண்டமைந்துள்ளது.

5. திருக்குறளின் தனிச்சிறப்பு:

திருக்குறளானது வெண்பா யாப்பினால் உருவான பழைய நூலாகும். தமிழ் எழுத்துக்களில் “அ” வில் தொடங்கி கடைசி எழுத்தாகிய “ன்”  என்பதில் முடிகிறது இதன் தனி சிறப்பாகும்.

இதற்கு தருமர், மணக்குடவர், தாமத்தார், நச்சார், திருமலையார், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர், பாரதியார், பரிமேழகர் எனும் 10 பேர் உரை எழுதியுள்ளனர்.

சிறப்புப்பாயிரப் பாடல்கள் பல சேர்ந்து “திருவள்ளுவமாலை” என்று ஒரு நூலாகவே அமைகின்றன. பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்பு நூலாகவும் திருக்குறள் காணப்படுகிறது.

6. முடிவுரை:

எல்லா காலத்திற்கும் இடத்திற்கும் பொருத்தமான கருத்துக்களை கொண்ட அமைந்துள்ள திருக்குறளானது, ஒரு மாணவனுக்கு அவனுக்கு வேண்டிய ஒழுக்கங்களையும், அறக்கருத்துக்களையும் எடுத்துக் கூறும் சிறந்த நூலாக அமைகின்றது.

எனவே ஒவ்வொரு மாணவனும் இந்த திருக்குறளை வாசிப்பதன் மூலம் பல்வேறு கருத்துகளை விளங்கி தமது வாழ்வை செம்மைப்பட  வழிநடத்த முடிகின்றது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.