இறால் மிளகு வறுவல்

இறால் மிளகு வறுவல் தமிழகத்தில் அசைவ பிரியர்களால் மிகவும் விரும்பி உண்ணப்படும் ஒரு அசைவ உணவு. பொதுவாகவே இறாலை கொண்டு செய்யப்படும் அனைத்து விதமான உணவுகளுக்கும் இறால் பிரியர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் இறால் மிளகு வறுவல் என்றால் கேட்கவே தேவையில்லை அதை சமைக்கும் போதே அதனின் வாசமே வீட்டில் இருப்பவர்களை தானாக கிச்சனுக்கு கூட்டி வந்து விடும்.

Jul 10, 2025 - 11:44
 0  1
இறால் மிளகு வறுவல்
Prep Time 15 min
Cook Time 15 min
Serving 10
Difficulty Easy

இதை பெரும்பாலும் சாதத்தில் போட்டோ, அல்லது தோசை, சப்பாத்தி, பூரி, நான், மற்றும் புல்காவுக்கு சைடிஷ் ஆகவோ தான் மக்கள் சுவைக்கிறார்கள். இது இன்றி மிளகு ரசம் சாதத்திற்கும் மக்கள் இறால் மிளகு வறுவலை சுவைக்கிறார்கள். இறால் மிளகு வறுவல் மற்றும் ரசம் சாதமும் ஒரு அசத்தலான காம்பினேஷன். இந்த காம்பினேஷனை ஒருமுறை சுவைத்து விட்டால் இதை மீண்டும் மீண்டும் கட்டாயம் சுவைக்க தோன்றும்.

இறால் மிளகு வறுவலின் ஸ்பெஷல் என்னவென்றால் மற்ற அசைவ உணவுகளை போல இதை சமைப்பதற்கு எந்த விதமான கடினமான செயல் முறைகளையும் பின்பற்ற வேண்டியதில்லை. அது மட்டுமின்றி இவை செய்வதற்கும் அதிக நேரம் ஆகாது. இறால் எளிதில் வேகும் தன்மை கொண்டு இருப்பது தான் இதற்கு காரணம். ஆனால் இறாலில் இருக்கும் குடல் மற்றும் தோலை நாம் கவனமாக அகற்ற வேண்டும் அதனால் இறாலை சுத்தம் செய்வதற்கு மற்ற மாமிசங்களை விட சற்று கூடுதலான நேரம் பிடிக்கும்.

இப்பொழுது கீழே இது செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Directions

1. தேவையான பொருட்கள்:
  • 250 கிராம் இறால்
  • 1 பெரிய வெங்காயம்
  • 3 பல் பூண்டு
  • 1 இஞ்சி துண்டு
  • 2 to 3 காய்ந்த மிளகாய்
  • 2 மேஜைக்கரண்டி தனியா
  • 1 மேஜைக்கரண்டி சீரகம்
  • 1 மேஜைக்கரண்டி மிளகு
  • 2 பட்டை துண்டு
  • 3 கிராம்பு
  • 1 ஏலக்காய்
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு
  • சிறிதளவு கருவேப்பிலை
  • சிறிதளவு கொத்தமல்லி
2. செய்முறை:
  • முதலில் வெங்காயம், கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் இறாலை நன்கு சுத்தம் செய்து கழுவி ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தனியா, சீரகம், மற்றும் மிளகை போட்டு அதை நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும்.
  • அது நன்கு வாசம் வந்ததும் அதை எடுத்து ஒரு தட்டில் கொட்டி பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விட்டு பின்பு அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
  • பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, மற்றும் காய்ந்த மிளகாயை சேர்த்து அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
  • ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு அதை நன்கு கலந்து விட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் இறாலை போட்டு அது நன்கு வெங்காயத்துடன் சேருமாறு அதை கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும்.
  • ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 4 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.
  • 5 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை தூவி அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும்.
  • ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு இறால் மிளகு வறுவலை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அசத்தலாக இருக்கும் இறால் மிளகு வறுவல் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
செய்முறை:

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.