பொங்கலுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.... 6 நாட்கள் உங்களுக்கு ஜாலி
Pongal vidumurai in tamil
பொங்கலுக்கு அதிரடி அறிவிப்பை
வெளியிட்ட தமிழக அரசு.... 6
நாட்கள் உங்களுக்கு ஜாலி
பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு போக போறீங்களா..? ரயில் டிக்கெட்டுகள் காலி.. இனி தமிழகம் அடுத்த ஒரு வாரத்திற்கு பின் விழாக்கோலமாக காட்சியளிக்கப்போகிறது. காரணம் தமிழர்களின் பாரம்பரியமான திருவிழாவான பொங்கல் பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த வார வீக் எண்டு முடிந்து அடுத்த ஒரு வார வீக் எண்ட் மட்டுமே உள்ளது. இந்த நிலையில், தற்போது முதல் பொங்கலுக்கு புத்தாடைகள் வாங்க
கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த நிலையில், மக்களுக்கு இன்ப செய்தி வழங்கும் விதமாக தமிழ்நாடு அரசு, தமிழகம் முழுவதும் உள்ள மக்களை குஷிப்படுத்த விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், பொங்கல் விடுமுறைகளை தவிர்த்து கூடுதல் விடுமுறையையும் அளித்துள்ளது. இதனால் பொதுமக்கள், வெளியூர்களில் தங்கி வேலை பார்ப்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். எனவே, இந்த பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 17.01.2025 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், 25-ம் அன்று பணி நாளாக அறிவித்தும் உத்தரவிட்டுள்ளார். 2025ம் ஆண்டில் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து 15-ம் தேதி (திருவள்ளுவர் நாள்), ஜனவரி 16-ம் தேதி (உழவர் நாள்) கொண்டப்படுகிறது. அதை தொடர்ந்து 17-ஆம் தேதி வேலை நாளாக இருந்தது. அடுத்த இரண்டு நாட்கள் வார இறுதி நாட்கள் 18ஆம் தேதி சனி மற்றும் 19 ஆம் தேதி ஞாயிறு விடுமுறையாக இருந்தது. இந்த நிலையில், தமிழக அரசானது முன்பு ஜனவரி 14-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 16-ம் தேதி (வியாழக்கிழமை) வரை 3 நாட்கள் அரசு விடுமுறையை அறிவித்திருந்தது.
அதேநேரம் அந்த வாரத்தில் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் வேலை நாளாகவும் அதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு அரசு விடுமுறை என்பதாலும், சொந்த ஊர் செல்பவர்கள் வெள்ளிக்கிழமை விடுமுறை வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர் இதனை ஏற்று கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 17.01.2025 அன்று விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார் இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வரும் 14.01.2025 செவ்வாய்கிழமை அன்று தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதாலும், 15.01.2025, 16.01.2025, 18.01.2025 மற்றும் 19.01.2025 ஆகியவை அரசு விடுமுறை நாட்கள் என்பதாலும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில், அதற்கு இடைப்பட்ட நாளான 17.01.2025 (வெள்ளி கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இதனையடுத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், 25.01.2025 (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக வெளியூர்களில் தங்கி இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவர். குறிப்பாக தொடர் விடுமுறை கிடைப்பதால் ஏராளமான மக்கள் பயணம் செய்வார்கள். அவர்களுக்காக தற்போது நற்செய்தி வழங்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?