Pongal 2025: பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிப்பு! ரேஷன் அட்டைதாரர்களுக்கு என்னென்ன?
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 2025 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. இந்த தொகுப்பில் சர்க்கரை பொங்கல் செய்ய தேவையான பச்சரிசி, வெல்லம், இதர பொருள்கள், கரும்பு உள்ளிட்டவை அடங்கும். பொருள்கள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவை ஆட்சிக்காலத்திற்று ஏற்றார் போல் ஒவ்வொரு விதமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2025ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்," 2025-ஆம் ஆண்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு வழங்கிட தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாகப் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும், உழவர் பெருங்குடி மக்களுக்கும் அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் தொகுப்பில் ரூ.1,000 இல்லை ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்
இதுதொடர்பாக அவர் கூறுகையில்," பொங்கல் தொகுப்பில் இந்த முறை ரூ.1,000 வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு புயல், மழை போன்ற பேரிடர்களுக்கு அரசு ரூ.2 ஆயிரம் கோடி வரை செலவு செய்துவிட்டது. பேரிடருக்கான மாநில அரசு நிதியை விடுவிக்கும்படி மத்திய அரசிடம் கோரினோம்.
ரூ.3 ஆயிரம் கோடி கேட்ட நிலையில், ரூ.275 கோடி மட்டுமே மத்திய அரசு வழங்கியது. பொங்கல் தொகுப்புக்கு தற்போது வரை ரூ.280 கோடி செலவிடப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 ஐ பொங்கலுக்கு முன்பு வழங்கிட பரிசீலிக்கிறோம்" என்றார்.
What's Your Reaction?