நடிகை திரிஷா கூட நடிச்ச ராசியா இருக்குமோ! ரூ.2.60கோடி மதிப்புள்ள காரை வாங்கிய மலையாள நடிகர்.. யாருனு தெரியுதா?

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்துக் கொண்டிருக்கின்றார் திரிஷா. இவருடன் ஐடென்டிட்டி படத்தில் சேர்ந்து நடித்த நடிகர் ஒருவர் மிக மிக விலை உயர்ந்த ஆடம்பர காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Feb 13, 2025 - 14:51
 0  3
நடிகை திரிஷா கூட நடிச்ச ராசியா இருக்குமோ! ரூ.2.60கோடி மதிப்புள்ள காரை வாங்கிய மலையாள நடிகர்.. யாருனு தெரியுதா?

டோவினோ தாமஸ், இவரே ஆடம்பர காரை வாங்கிய அந்த நடிகர் ஆவார். மலையாள திரை உலகின் முன்னணி நடிகர்களில் டோவினோ தாமஸ்-ம் ஒருவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவர் மின்னல் முரளி போன்ற பிரபலமான திரைப்படங்களில் எல்லாம் நடித்திருக்கின்றார்.

இந்த நிலையிலேயே சமீபத்தில் திரிஷா மற்றும் வினய் உள்ளிட்டோருடன் சேர்ந்து முன்னணி கதாபாத்திரத்தில் ஐடென்டிட்டி படத்தில் டோவினோ தாமஸ் நடித்திருக்கின்றார். இந்த படத்திற்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்தே தற்போது ரூ. 2.60 கோடி மதிப்புள்ள சொகுசு காரை நடிகர் வாங்கி இருக்கின்றார்.
8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸே இந்த எஞ்சின் உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் மூலமே அனைத்து நான்கு சக்கரங்களுக்கும் இயக்க ஆற்றல் அனுப்பப்படுகிறது. இந்த கார் ஆடம்பர அம்சங்களை வழங்கக் கூடிய மட்டுமல்ல அதிக ஆற்றலையும் உருவாக்கக் கூடியது என்பதற்கு சான்றாகவே இந்த மோட்டார் உள்லது. இந்த காரால் ஆஃப் ரோடுகளையும் சமாளிக்க முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஆஃப்-ரோடுகளில் பயணிக்கும் போது பெரிய அளவில் அசௌகரியமான உணர்வே ஏற்படாது. இதனால்தான் பணக்காரர்கள் பலரின் தேர்வாக இந்த கார் மாடல் இருக்கின்றது. டோவினோ தாமஸ் இடம் ஏற்கனவே ஆடம்பர கார்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன.

குறிப்பாக, சென்ற ஆண்டின் மத்தியிலேயே பிஎம்டபிள்யூ எக்ஸ்எம் (BMW XM) சொகுசு கார் மாடலை வாங்கினார். மலையாள திரை உலகில் இந்த காரை வாங்கிய முதல் ஆள் இவரே ஆவார். இதுமட்டுமல்ல அவரிடத்தில் சொகுசு பங்களா போன்ற சகல வசதிகளைக் கொண்ட கேரவன் ஒன்றும் உள்ளது. இதனை அவர் 2023 ஆம் ஆண்டில் வாங்கினார். இதுமட்டுமல்ல அவரிடத்தில் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Land Rover Range Rover Sport), பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7-Series) மற்றும் மினி கன்வெர்டிபிள் சைடுவால்க் ஸ்பெஷல் எடிசன் (Mini Sidewalk Convertible Special Edition) உள்ளிட்ட கார் மாடல்களும் பயன்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.


What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.