3000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்! நெல்லையில் டாடா சூரிய மின்கல ஆலையை தொடங்கி வைத்தார் ஸ்டாலின் ...........

Tamilnadu CM Stalin Tirunelveli Sipcot Grand Opening Function in Tamil

Feb 6, 2025 - 14:34
 0  5
3000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்! நெல்லையில் டாடா சூரிய மின்கல ஆலையை தொடங்கி வைத்தார் ஸ்டாலின் ...........

3000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்! நெல்லையில் டாடா சூரிய மின்கல ஆலையை தொடங்கி வைத்தார் ஸ்டாலின் ...........

 தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று நெல்லை வருகை தந்தார். 2 நாள் பயணமாக நெல்லை வந்துள்ள முதல்வர் ஸ்டாலின், சுமார் 9,370 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்க உள்ளார். நெல்லை வந்து இறங்கியதும் முதல்வர் ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நெல்லை கேடிசி நகரில் ஒரு கிமீ தூரம் நடைபயணமாக சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு சாலையின் இருபுறமும் குவிந்திருந்த திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ளுக்கு உற்சாகமாக கையசைத்தார். தொடர்ந்து நெல்லை கங்கைகொண்டானில் உள்ள டாடா சூரிய மின்கல ஆலையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கங்கைகொண்டான் சிப்காட்டில் ரூ.4,400 கோடி செலவில் அமைக்கப்பட்டு இருக்கும் டாடா பவர் சோலார் நிறுவனத்தின் உற்பத்தியை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இதன் பின்னர் விக்ரம் சோலார் நிறுவனத்தின் கட்டுமான பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அங்கு அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்காவையும் ஸ்டாலின் திறந்து வைத்தார். Also Read மூலப்பத்திரம் இல்லாமல் பத்திரப்பதிவு.. தமிழக அரசு மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம் மேஜர் உத்தரவு தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழகம் முழுவதும் மாவட்டங்கள்தோறும் சென்று கள ஆய்வு செய்து அந்தந்த மாவட்டங்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தும் வருகிறார். அந்த வகையில் இன்று முதல்வர் ஸ்டாலின் நெல்லை வந்துள்ளார். 2 நாள் பயணமாக நெல்லை வந்துள்ள முதல்வர் ஸ்டாலின், இன்றும் நாளையும் கள ஆய்வு பணிகளை செய்கிறார். இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு விமான மூலம் வந்தடைந்தார். காலை 11.15 மணிக்கு தூத்துக்குடிக்கு வந்து முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலமாக நெல்லை பாளையங்கோட்டைக்கு மதியம் 12 மணியளவில் வந்தடைந்தார். நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடந்து முதல்வர் ஸ்டாலின் 1 கி மீது தூரம் நடைபயணமாக சென்றார். அப்போது சாலையின் இருபுறமும் நின்ற மக்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வர் ஸ்டாலினும் கையசைத்தபடி சென்றார்.  இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் கங்கைகொண்டான் சிப்காட் செல்கிறார். அங்கு ரூ.4,400 கோடி செலவில் அமைக்கப்பட்டு இருக்கும் டாடா பவர் சோலார் நிறுவனத்தின் உற்பத்தியை தொடங்கி வைத்தார். இதன் மூலம் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதன் பின்னர் விக்ரம் சோலார் நிறுவனத்தின் கட்டுமான பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அங்கு அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்காவையும் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து நெல்லை வண்ணாரப்பேட்டை அரசினர் சுற்றுலா மாளிகைக்கு வரும் முதல்வர் ஸ்டாலின், மாலை 5 மணியளவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.40 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பாளையங்கோட்டை மகாத்மா காந்தி தினசரி சந்தை, காய்கனி சந்தை மற்றும் புதிய வணிக வளாகத்தினை திறந்து வைக்கிறார். தொடர்ந்து அங்கிருந்தபடியே, காணொலி காட்சி வாயிலாக, நெல்லை டவுன் பாரதியார் பள்ளிக்கு அருகில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் சிறுவர் விளையாட்டு அரங்கம் மற்றும் நயினார்குளம் தெற்கு பகுதியில் மேம்படுத்தப்பட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். 

 சபாஷ் ஸ்ருதி " இதன் பின்னர் முதல்வர் ஸ்டாலின், நெல்லை பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் திமுகவின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார். இதில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி பலர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகின்றார்கள். பின்னர் இரவு நெல்லை வண்ணார்பேட்டை அரசினர் சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கிறார். மறுநாள் காலையில் அதாவது வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு முதல்வர் ஸ்டாலிம் நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை சண்திக்கின்றார். காலை 9.30 மணியளவில் சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்படும் ஸ்டாலின் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை (சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி) வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரூ.78 கோடியில் நவீன வசதிகளுடன் கூடுதலாக கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். Advertisement பின்னர் காணொலி காட்சி வாயிலாக ரூ.1,061 கோடி மதிப்பிலான தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிநீர் இணைப்பு வெள்ள நீர் கால்வாய் திட்டம் உள்ளிட்ட முடிவுற்ற 24 திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். இதேபோன்று ரூ.180 கோடி செலவில் தாழையூத்து-கொங்கந்தான்பாறை விலக்கு வரை நெல்லை மாநகருக்கான மேற்கு புறவழிச்சாலை பகுதி-1 திட்டப்பணிகள் உள்ளிட்ட 20 பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதன்பின்னர் 75,084 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். முதல்வர் ஸ்டாலினின் இந்த 2 நாள் பயணத்தில் மொத்தம் ரூ.9,368 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். முதல்வர் ஸ்டாலின் நெல்லை பயணத்தையொட்டி சுமார் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோன்று பாதுகாப்பு காரணங்களுக்காக நெல்லை மாநகரம், தாழையூத்து பகுதியில் டிரோன் கேமரா பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் வருவதையொட்டி, நெல்லையில் பிரமாண்ட வரவேற்பு பதாகைகள், வழிநெடுகிலும் கட்சி கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow