சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள்.! கல்வி கடன் தள்ளுபடி -தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
கல்வி மாணவர்களின் வாழ்க்கைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் உயர்கல்வி படிக்க கல்வி கடன் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகையை தமிழக அரசு அதைத் தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது.

கல்வி தான் மாணவர்களுக்கு முக்கிய படியாக உள்ளது. எனவே அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஏழை எளிய மாணவர்கள் கல்வி கற்பதற்காக மத்திய மாநில அரசுகள் திட்டங்களை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் இலவச கல்வியானது வழங்கப்படுகிறது. மேலும் சீருடை, காலணி, இலவச பேருந்து பயணம் இது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
மேலும் ஏழை எளிய மாணவர்கள் பயன் அடையும் வகையில் காலை மற்றும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உயர்கல்வி படிக்க செல்லும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் பல மடங்கு உள்ளதால் மாணவர்களால் உயர்கல்வியை தொடர முடியாத நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் கல்வி கட்டணம் கட்ட வங்கிகள் மூலம் கடன் உதவி செய்து வருகிறது. அதன் படி மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் கல்வி கடன் வழங்கப்படுகிறது.
கல்வி கடனை கட்ட முடியாத நிலை
மாணவர்கள் படிப்பை முடித்த பின்னர் கல்வி கட்டணத்தை கட்டும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல லட்சம் மாணவர்கள் உயர்கல்வி படிக்க கல்வி கடன் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை பெரும்பாலான மாணவர்கள் உரிய முறையில் திருப்பி கட்டி விடுகின்றனர். ஒரு சில மாணவர்களால் கட்ட முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும் என அவ்வப்போது கோரிக்கைகள் எழும். இந்த சூழ்நிலையில் மாணவர்கள் கடன் ரத்து தொடர்பாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கல்வி கடன் வசூலிக்க முடியவில்லை
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு 1972-1973 முதல் 2002-2003 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் உட்பட அனைத்து படிப்புகளுக்கும் கடன் உதவி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2003-2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகையினை மாணாக்கர்களிடமிருந்து வசூலிக்க இயலவில்லையென கூறப்பட்டுள்ளது.
கல்வி கடன் தள்ளுபடி
மேலும் வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் அலுவலக ஆவணங்களில் இல்லாததாலும் மற்றும் வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண இயலாததாலும், ரூ.48,95,00,000/-ஐ (ரூபாய் நாற்பத்தெட்டு கோடியே தொண்ணூற்று ஐந்து லட்சம் மட்டும்) சிறப்பினமாக கருதி முழுவதும் தள்ளுபடி (Write off proposal) செய்து அரசு ஆணையிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?






