TNPSC Group 4 2025: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு – எப்போது? முழு விவரம்
TNPSC Group 4 2025: குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் குரூப் 4 தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. குரூப் 4 தேர்வுக்கான இணையவழி விண்ணப்பத்தை மே 24ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு மூலம் விஏஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 3935 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குரூப் 4 தேர்வுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் குரூப் 4 தேர்வு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 2025 காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு மூலம் 3,935 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.
கல்வித் தகுதி
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு டிஎன்பிஎஸ்சி நிபந்தனைகளின் படி ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வு, சான்றிதழ் பரிபார்ப்பு மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான டிஎன்பிஎஸ்சி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 25ஆம் தேதிக்கு மேல் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளது.
What's Your Reaction?






