தேன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? - Honey Benefits in tamil
Honey Benefits in tamil

தேன் சாப்பிட்டால் இவ்வளவு
நன்மைகளா?
இதயம் சீராக இயங்கவும் உடலுக்குச் சீரான ரத்த ஓட்டம் கிடைக்கவும் தேன் துணைபுரியும். ரத்தத்திலுள்ள வேண்டாத நச்சுத் தன்மையுள்ள பொருள்களை வெளியேற்றி ரத்தத்தை தூய்மைப்படுத்த தேன் உதவுகிறது.
தேனில் விட்டமின் பி1, பி2, பி3, பி5, பி6, சி, இ முதலிய வைட்டமின்களும் மற்றும் அயோடின், கால்சியம், கந்தகம், இரும்பு, சோடியம், மெக்னீசியம், தாமிரம், குளோரின், பொட்டாசியம், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், உப்பு, குளுகோஸ், லெவுகோஸ், லாக்டிக் அமிலம், டார்டாரிக் ஆஸிட், சிட்ரிக் அமிலம், க்ளாரிக் அமிலம் போன்ற இதர வகையான சத்துப்பொருள்களும் உள்ளன. இவையாவும் நம் உடல் வளர்ச்சிக்குத் தேவை. தேன், பிறந்த குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள், விளையாட்டு வீரர்கள், நோயுற்றவர்கள் என அனைவருக்கும் ஏற்ற இயற்கை உணவுதான். இருப்பினும் பலர் தேனைப் பற்றி பல வதந்திகளைப் பரப்புவது முற்றிலும் அறியாமையே.
நம் இதயத்தைப் பலப்படுத்தும் தேன், நமது ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது. உடலில் ரத்தத்தைத் தூய்மைப்படுத்துவதோடு இதயத்தின் தசைநார்களுக்கும் வலிமையைத் தருகிறது. இதயம் சீராக இயங்கவும் உடலுக்குச் சீரான ரத்த ஓட்டம் கிடைக்கவும் தேன் துணைபுரியும். ரத்தத்திலுள்ள வேண்டாத நச்சுத் தன்மையுள்ள பொருள்களை வெளியேற்றி ரத்தத்தைத் தூய்மைப்படுத்த தேன் உதவுகிறது.
தேன் கல்லீரல் செயல்பாட்டைத் தூண்டுகிறது. மேலும், கிளைகோஜன் உருவாக்கத்துக்கும் நச்சுப் பொருள்களை கல்லீரல் மூலம் வெளியேற்றவும் பெரிதும் உதவுகிறது. குடல் சம்பந்தப்பட்ட வியாதிகளைத் தேன் குணப்படுத்துகிறது.
தேன், பசியை அதிகரிக்கச் செய்யும். உடலிலுள்ள கழிவுப் பொருள்களையும் எளிதாக வெளியேற்ற உதவும். வாயுவை வெளியேற்றும் ஆற்றலும் தேனுக்கு உண்டு. அதுமட்டுமா? தேன் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது. தொற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் இதற்கு உண்டு. காய்ச்சல் போன்ற நோய்க்கு தேன் சிறந்த மருந்தாகிறது. அது அந்நோயாளிகளுக்கு இழந்த சக்தியை அளிப்பதோடு அந்நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடும் சக்தியையும் அளிக்கிறது.
தேன் தொண்டையினுள் சதை வளர்வதைத் தடுக்கிறது. தொண்டைக்கட்டு இருமலையும் குணப்படுத்துகிறது. நரம்புத்தளர்ச்சியை நீக்கி தூக்கத்தில் படுக்கையில் சிறுநீர் கழிப்பதைத் தடுக்கிறது. கைகால் நடுக்கத்தைப் போக்க வல்லது. எலும்புகளுக்குகூட வலிமை தரக்கூடியது. தேன், தூக்கமின்மையைத் துரத்தி உறக்கம் தரவல்லது. மேலும், தேன் உணவில் சேர்ப்பதால், பற்களும் எலும்புகளும் வலுப்பெறும். தசைகளும் வலுப்பெறும். ரத்தக் குறைவால் ஏற்படும் சோகை நோயைக் குணமாக்க வல்லது.
தேன், சீழ்பிடிக்கும் நிலையிலுள்ள புண்களை ஆற்ற உதவுகிறது. கட்டிகள், கொப்புளங்கள் வெந்தபுண்கள் வெட்டுக் காயங்கள், தீக்காயங்கள் ஏற்பட்டால், அதில் தேனைத் தடவி குணப் படுத்தலாம். மூளைப் பகுதியில் சீரான ரத்த ஓட்டம் பெற உதவும். தேன், அதன்மூலம் நினைவாற்றலும் அதிகரிக்க உதவும். கீழ்வாதம் பக்கவாதம் போன்ற நோய்களைக் குணமாக்க உறுதுணையாகத் தேன் உதவும். ரத்தமூலம் இருப்பினும் அதைக் குணமாக்கும் இயல்பு தேனுக்கு உண்டு.
பழங்களைப் பதப்படுத்த தேன் பயன்படுகிறது. ரொட்டி, கேக், மிட்டாய் தயாரிக்க தேன் பயன்படுகிறது. மது தயாரிக்க தேன் பயன்படுகிறது. போதை நஞ்சு அபின் போன்ற நஞ்சு வகைகளை முறிக்கும் திறன் தேனுக்கு உண்டு.
தேன் உடல் வெப்பத்தைத் தணிக்கவல்லது. முதுமையை தாமதப்படுத்தி வாழுங்காலத்தைக் கூட்டுகிறது. வெட்டப்பட்ட குச்சிகளைத் தேன்தடவி நடும்போது விரைவில் வேர்பிடிக்கிறது. தேன் (பேரீச்சம்பழம்) ஆண்மைக்குறைவை நீக்கி இனப்பெருக்க உணர்வை உயர்த்துகிறது.
தேன் ஆயுர்வேத மருத்துவத்தில் பலவகை லேகியங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. இருமல், சளி, தொண்டைக்கட்டு, வாந்தி, விக்கல், தலைவலி ஆகியவற்றைத் தேன் குணப்படுத்து கிறது. தேன் நமது தோட்டத்திலேயே பெற, தேனீப்பெட்டி வைத்து பலன் பெறலாம்.
-
,
What's Your Reaction?






