உடல் எடையை குறைக்க உதவும் குறிப்புகள் - Weight loss Tips in Tamil

How to reduce weight loss in tamil

Nov 16, 2024 - 19:13
 0  13
உடல் எடையை குறைக்க உதவும் குறிப்புகள் - Weight loss Tips in Tamil
 
 உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் இந்த உணவு முறையை பின்பற்றுங்கள் -Weight loss Tips in Tamil

சில சமயங்களில் சோம்பல், சில நேரங்களில் வீட்டு வேலைகள், குழந்தைகள் மற்றும் பல்வேறு பொறுப்புகளின் காரணமாக, நம்மை நாமே கவனித்து கொள்ள முடியாமல் போகிறது. இந்த சூழலில், உடலில் உள்ள கொழுப்பு சத்தின் அளவு அதிகமாகி விடுகிறது. நம் கைகள், பின்புறம், கழுத்து, முகம், வயிறு மற்றும் தொடை ஆகிய கண்களுக்கு புலப்படும் பகுதியில் கொழுப்பு அதிகரிக்கும். உடல் எடையை ஏற்றுவது மிகவும் எளிது ஆனால் அதை குறைக்கும் போது, நம் உடலில் வியர்வை சிந்தி சிரமப்பட வேண்டும்.

நீங்கள் மனது வைத்தால் இரண்டே வாரங்களில் பத்து கிலோ எடையை குறைக்கலாம் என்று உங்களுக்கு தெரியுமா?    "உடல் எடையை குறைக்க நாம் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். நீங்கள் விதவிதமான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்பதும் உங்கள் உடல் எடையை குறைக்கும். டாக்டர். இடூ ஒரு ஊட்டச்சத்து மிக்க உணவு முறை பட்டியலை வெளியிட்டுள்ளார். இதை உண்பதால் உங்களாலும் இரண்டே வாரங்களில் 7-10 கிலோ எடையை குறைக்க முடியும்.

இதவும் உதவலாம்: சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்பட்டால் இந்த ஆயுர்வேத பானத்தை குடிக்கலாம்

 

டீடாக்ஸ் பானத்துடன் ஆரம்பியுங்கள்:

முதலில் காலையில் வெதுவெதுப்பான நீரை குடிப்பதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை நீக்கி விடலாம். இதற்கு நீங்கள் வெந்தயம் மற்றும் இஞ்சி தண்ணீர் பருகலாம்.

செய்முறை

·         2 ஸ்பூன் வெந்தயம் மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் 5-7 நிமிடம் வேக விடவும்.

·         நீர் பாதியாக சுண்டிய பிறகு ஒரு இஞ்சி துண்டை அதில் சேர்த்து மூடி விடவு‌ம்.

·         இப்போது எலுமிச்சை சாறு அதில் சேர்த்து, வடிகட்டி கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கவும்.

நன்மைகள்

·         உங்கள் உடல் கொழுப்பை இஞ்சி குறைத்து விடும். இதனால் உடல் பருமன் குறையும், உடல் எடை குறையும்.

·         வயிற்றில் இருக்கும் கொழுப்பு மற்றும் அடிபோஸ் திசுக்களில் உள்ள கொழுப்பை எரிக்கும் ஆற்றல் வெந்தய விதைகளுக்கு உள்ளது. இதில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. மேலும் இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை நீக்கும்.

·         எலுமிச்சையில் கலோரிகள் குறைவாக உள்ளது. இதை சாதாரண தண்ணீராக பருகலாம். இதன் மூலம் கலோரி உட்செல்வது தடுக்கப்படும்.

நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த காலை உணவு

 

·         நீங்கள் புரதச்சத்து அதிகம் நிறைந்த காலை உணவை உண்ண வேண்டும். பாசி பருப்பு, முட்டை, ஓட்ஸ், அவல் ஆகியவை இதில் அடங்கும்.

செய்முறை

·         நீங்கள் ஓட்ஸை, கொழுப்பு நீக்கிய பாலில் கலந்து சாப்பிடலாம். ஓட்ஸை காய்கறிகள் உடன் கலந்து காலை உணவாக சாப்பிடலாம்.

·         ஒரு கிண்ணம் பழக்கலவை உடன் மஞ்சள் பாலை கலந்து சாப்பிடலாம். இதே பழக்கலவையுடன் 1ஸ்பூன் க்ரீம் கலந்தும் சாப்பிடலாம்.

·         நீங்கள் காலை உணவாக அவல் சாப்பிட்டால், 50 கிராம் சீஸ் மற்றும் மஞ்சள் பால் கலந்து சாப்பிட வேண்டும்.

நன்மைகள்

·         நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து இருப்பதால், ஓட்ஸ் நீண்ட நேரம் வயிறு நிரம்பியது போல் நிறைவாக உணர வைக்கும்.

·         இந்த நார்ச்சத்து உங்கள் செரிமான மண்டலத்திற்குநன்மை செய்யும். இன்னொரு பக்கம், புரதச்சத்து அதிகம் உள்ள உணவு கொழுப்பை எரிக்கும், வயிறை நிரம்ப செய்யும் மற்றும் எடையை குறைக்கும்.

சாலட்களால் நிறைந்த மதிய உணவு

 

உங்கள் மதிய உணவுக்கு அதிகமான சாலட்டுகள் சேருங்கள். பல நிறங்களில் காய்கறிகள் வைத்து உங்கள் சாப்பாடு தட்டை அலங்கரிக்கவும். இந்த ஊட்டச்சத்து மிகுந்த காய்கறிகள் உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

செய்முறை

·         1 ஓட்ஸ் அடையுடன் 1 கப் காய்கறிகள் மற்றும் 1 கப் சாலட் சேர்த்து சாப்பிடலாம். இத்துடன் கட்டாயமாக தயிர் சேர்க்க வேண்டும்.

நன்மைகள்

·         சாலட் நிறைந்த உணவு உங்கள் வயிறை பசியில்லாமல் வைக்கும். காய்கறிகளில் அதிகம் நார்ச்சத்து, தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் இது ஆரோக்கியமான உணவாகும்.

·         சாலட் உண்ண வளர் சிதை மாற்றம் பாதிக்கும், இதனால் உடல் எடை குறையும்

மிதமான இரவு உணவு

7-8 மணிக்குள் இரவு உணவை முடிக்க வேண்டும். இது உங்கள் செரிமானத்தை எளிமை ஆக்குகிறது. ஒரு வேளை நீங்கள் நீண்ட நேரம் விழித்திருந்தால், தூங்க செல்லும் 1 மணி நேரத்திற்கு முன் மஞ்சள் பாலை குடிக்க வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்

·         நீங்கள் வீட்டில் செய்த சூப்பை இரவு உணவாக சாப்பிடலாம். அதில் பச்சை காய்கறிகள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

·         இதை தவிர, இரவில் பிரவுன் அரிசி கஞ்சி செய்து சாப்பிடலாம். அத்துடன் ஒரு கப் சாலட் சாப்பிட மறக்க வேண்டாம்.

நன்மைகள்

·         நீங்கள் சூப்புடன் சாப்பிட வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். எனவே இரவில் நீங்கள் குறைவாகவே சாப்பிடலாம்.

·         இரவு சாப்பாடு சீக்கிரமாக மற்றும் கொஞ்சமாக எடுத்து கொள்வதால் தூக்கம் நன்கு வரும், செரிமான தன்மை அதிகம் ஆகும்,வளர் சிதை மாற்றத்திற்கு ஊக்கமாக இருக்கும். இரத்த அழுத்தம் குறையும். இதனால் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இதுவும் உதவலாம்: சர்க்கரை நோய் மற்றும் பிற உடல் நல பிரச்சனைகளை விரட்டும் வெண்டைக்காய்

க்ரீன் டீ மற்றும் மசாலா டீ குடிக்கலாம்

·         இந்த டீக்களை ஒரு நாளைக்கு மூன்று முறை குடிக்க வேண்டும். கிரீன் டீ உடல் எடை குறைப்பிற்கு பிரசித்தி பெற்றது. ஏனென்றால் இது வளர் சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. எனவே உங்கள் உடல் உணவை சக்தியாக மாற்றுகிறது,கொழுப்பை எரிக்கிறது. இதன் காரணமாக எடை குறைகிறது.

·         இந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளுடன் தினமும் ஒரு மணி நேரம் நடை பயிற்சி மேற்கொள்ளலாம். இதை காலை அல்லது மாலை செய்யலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow