தீபாவளியும் போனசாக தகவல்களும் Diwali and Bonus information
தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம்., அதற்கென கூறப்படும் பல வரலாற்று காரணங்கள்.,தீபாவளி போனஸ் குறித்த சுவாரஸ்ய வரலாறு ஆகியவை குறித்து இப்பதிவில் காணலாம்.
தீபாவளி ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் தேய்பிறையில் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடப்படுகிறது.அதன்படி இவ்வாண்டு (2024) வியாழக்கிழமை அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடபடவுள்ளது.
கொண்டாடும் முறை: தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுந்து. எண்ணெய் குளியல் (கங்கா குளியல்) செய்து. புத்தாடை உடுத்தி, பட்டாசுகள் வெடித்து, இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபம் ஏற்றி., இறைவனை வணங்குவர்.
ஏனெனில், எண்ணெயில் லட்சுமிதேவியும், தண்ணீரில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்பு பண்டங்களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும், நமக்கு அருள்பாலிப்பார்கள். இவற்றிற்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்கினால் அனைவரும் மனம் குளிர்ந்து ஆசி வழங்கி, நம் குடும்பத்தாரை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துவருவார்கள் என்பது ஐதீகம்.
வரலாற்று காரணங்கள்:
ராமாயணமும் தீபாவளியும்: தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு பல புராண கதைகள் கூறப்படுகிறது. தீபாவளி இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற பண்டிகையாக உள்ளது. அந்த வகையில் வடநாட்டு மக்கள் தீபாவளி கொண்டாட பல வரலாற்று கதைகள் உள்ளது. ராமாயணத்தில் ராமர் ராவணனை அழித்து தனது வனவாசத்தை முடித்து சீதா மற்றும் லட்சுமணனுடன் அயோத்தி திரும்பிய நாள் அமாவாசை இரவு.. இந்த இருட்டு வேளையில் அயோத்தி மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு அவர்களை அகல் விளக்கு ஏற்றி வரவேற்றுள்ளனர். இந்த தீப ஒளியில் மூலம் நாட்டை அடைந்தார்கள். இவர்கள் வந்த நாள் தீபாவளி நாளாகும். தீப ஒளியின் வெளிச்சத்தில் வந்ததால் தீபாவளியை தீப ஒளி என்றும் கூறுகின்றனர் .
ஸ்கந்த புராணமும் தீபாவளியும்; மற்றொரு புராண கதையும் உள்ளது ,ஸ்கந்த புராணத்தின் படி பார்வதி தேவியின் 21 நாள் கேதார கௌரி விரதம் முடிவடைந்த பிறகு சிவன் பார்வதியை தன்னுள் பாதியாக ஏற்று அர்த்தநாதீஸ்வரர் உருவம் எடுத்த நாளாக கூறப்படுகிறது. இதனை நினைவுபடுத்துவதாகவும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மகாபாரதத்தில் வாயிலாக ஒரு புராண கதையும் கூறப்படுகிறது. மகாபாரதத்தில் சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் வனவாசம் அனுப்பப்பட்டனர். அதன் பின் அவர்கள் போரிட்டு வெற்றி பெற்று நகரம் திரும்பிய போது நாட்டின் மக்கள் அவர்களை வரவேற்கும் விதமாக தீபம் ஏற்றி கொண்டாடியதாகவும் கூறப்படுகிறது.
சமண மற்றும் புத்த சமயமும் தீபாவளியும்; சமண மதத்தின் படி பீகார் மாநிலத்தில் கி.மு 599-ல் பிறந்தவர் தான் மகாவீரர். இவர் பிறந்த நாள் மகாவீரர் ஜெயந்தியாக கொண்டாடப்படுவதை போல் முக்தி அடைந்த நாளை தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அது மட்டுமல்லாமல் மாமன்னர் அசோகர் புத்த மதத்தை தழுவிய நாள் தீபாவளி ஆக சொல்லப்படுகிறது. அதனை நினைவு கூறும் விதமாக புத்த மதத்தினரும் தீபாவளியை கொண்டாடுகின்றனர். இந்தியா மட்டுமல்லாமல் சிங்கப்பூர், வங்காளதேசம், இலங்கை போன்ற அண்டை நாடுகளும் தீபாவளியை வெளிச்ச நாளாக கொண்டாடுகின்றனர்.
நரகாசுரன் அழிக்கப்பட்ட வரலாறும் தீபாவளியும்; இதில் நம் தமிழ்நாட்டுக்கு என்று பரவலாக பேசப்படுவது நரகாசுரனின் கதைதான். இது பலருக்கும் தெரிந்த கதையாக உள்ளது. பூமா தேவிக்கும் விஷ்ணு பகவானுக்கும் பகுமன் என்ற மகன் பிறக்கிறான். அவன் பல துர்குணங்களை பெற்றிருக்கிறான்.அதனால் நரக அசுரன் என்று கூறப்பட்டு நாளடைவில் நரகாசுரன் என்று அழைக்கப்படுகிறான். அவன் வளர்ந்த பிறகு தேவர்களையும் தேவலோக பெண்களையும் மிகவும் துன்புறுத்துகின்றான். அது மட்டுமல்லாமல் பிரம்மாவிடம் தன் தாய் கையால் மட்டுமே தான் இறக்க வேண்டும் என்ற வரத்தையும் பெற்று விடுகிறான்.
இதனை அறிந்த மகாவிஷ்ணு ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரம் எடுத்து நரகாசுரனுடன் போரிடுகிறார். அப்போது நரகாசுரன் கிருஷ்ணனின் மீது அம்பை எய்துகிறான். இதனால் கிருஷ்ணர் மயக்கம் அடைவது போல் கீழே விழுகின்றார். இதை பார்த்த பூமாதேவி கோபமுற்று சத்தியபாமா என்ற அவதாரம் எடுத்து நரகாசுரனுடன் போரிட்டு அவனை அம்பால் எய்ததால் பழியாகிறான்.
அப்போதுதான் அவள் தன் தாய் என உணர்கிறான். இறக்கும் தருவாயில் ஒரு வரம் கேட்கிறார்..என் பிடியில் இருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் நான் இறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என கேட்கிறார்.. அதற்கு கிருஷ்ணரும் அந்த வரத்தை கொடுக்கிறார். இந்த வரலாற்று கதைகள் அனைத்தும் நடந்த இடம் வடநாட்டில் தான். கிபி15-ம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசின் காலத்தில் இருந்துதான் தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.
தீபாவளி போனஸ் குறித்த சுவாரஸ்ய வரலாறு:
தீபாவளி மாதம் பிறந்துவிட்டாலே, குழந்தைகளுக்கு பட்டாசு, புது துணி, இனிப்புகள் குறித்த நினைவுகளே ஒருபுறம் குஷியை கொடுத்துவிடும்..அதேசமயம், வேலை செய்யும் பெற்றோர்களுக்கு சந்தோஷத்தை கொடுப்பது என்னவென்று தெரியுமா.போனஸ்...
பெரும்பாலான நிறுவனங்களில் வழங்கப்படும் இந்த போனஸ்தான், பல குடும்பத்தின் பல நாள் கனவை நிறைவேற்ற உதவியாக இருக்கும்..இந்த போனஸ் வழங்கும் முறை எப்படி வந்தது. இது குறித்த சுவாரஸ்யமான தகவல்.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது, வார சம்பள முறை ஒவ்வொரு வாரமும் சம்பளம்.,அதாவது வருடத்திற்கு 52 வாரங்கள்..
மாத சம்பள முறையாக 4 வாரங்களுக்கு ஒரு முறை சம்பளம்., அதாவது 12×4=48 வாரங்கள் மாற்றப்பட்டது. பெரும்பாலான மாதங்களில் 4 வாரம் போக, கூடுதலாக 1 முதல் 3 நாட்கள் வரை இருக்கும்.இப்படி ஒவ்வொரு மாதத்திலும் மீதமாகும் நாட்களை கணக்கில் கொண்டால், அதுவே இன்னொரு மாதத்துக்கான அளவு வரும். இந்த தொகையே போனஸாக வழங்கப்படுகிறது.
நடைமுறைக்கு வந்தது எப்போது: இந்த போனஸ் நடைமுறையை ஆங்கிலேய அரசு தர மறுத்ததால்,1930-ம் ஆண்டிலிருந்து சுமார் 10 ஆண்டுகளாக மகாராஷ்ட்ராவில் உள்ள பல்வேறு தொழிலாளர் நல சங்கங்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதன் விளைவாக தீபாவளி, தசரா போன்ற பிரசித்தி பெற்ற பண்டிகையாதலால்,அதனையொட்டி கொடுத்தால் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அது வசதியாக இருக்கும் என கோரிக்கை வைத்ததின் விளைவாக 1940-ம் ஆண்டு, ஜூன் 30-ம் தேதி முதன்முதலில் இந்தியாவில் போனஸ் வழங்கப்பட்டது. ஆக போனஸ் என்பது விடுபட்ட கொடுக்கப்படாத நமக்குரிய சேர வேண்டிய ஒரு மாத சம்பளம் ஆகும்.
What's Your Reaction?