இந்திரஜா சங்கருக்கு அழகான ஆண் குழந்தை
Indhraja Sankar Baby delivery in tamil
இந்திரஜா சங்கருக்கு அழகான ஆண் குழந்தை
சென்னை: காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் விஜய் நடித்த பிகில் படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது அன்பையும் பிடித்துவிட்டார். அந்த படத்தைத் தொடர்ந்து கார்த்தியின் விருமன் படத்தில் அதிதி ஷங்கரின் தோழியாக நடித்திருந்தார். கடந்த ஆண்டு தனது மகளின் திருமணத்தை கோலாகலமாக ஊரே வியக்கும்படி நடத்தி முடித்திருந்தார் ரோபோ சங்கர். திருமணம் முடிந்த கையோடு கருவுற்ற சுப செய்தியையும் இந்திரஜா சங்கர் மீடியா வாயிலாக பகிர்ந்த நிலையில், அவரது வளைகாப்பு நிகழ்ச்சியையும் குடும்பத்தினர் அசத்தலாக சமீபத்தில் நடத்தி முடித்தனர். இந்நிலையில், இந்திரஜா சங்கருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் தாயும் சேயும் நலம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. "ரோபோ சங்கரின் மகளின் ஆசை இதுதான்.. நிறைவேற்றுவாரா மருமகன்?.. அவர் சொன்னதை கேளுங்க " இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் இந்திரஜா சங்கரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோபோ சங்கர் தாத்தா ஆகிட்டார் என்றும் இந்திரஜா அம்மாவாகிவிட்டார் என்பதை அறிந்த ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அம்மாவானார் இந்திரஜா: பிகில், விருமன் உள்ளிட்ட படங்களில் நடித்த இந்திரஜா சங்கர் ஜீ தமிழில் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறார் என்றும் அதற்காகத்தான் கமல்ஹாசனை அவர் சந்தித்தார் என கூறப்பட்டு வந்த நிலையில், தனது திருமணத்துக்காகவே கமல்ஹாசனை அவர் சந்தித்திருந்தார். மாமா கார்த்திக்கை திருமணம் செய்துக்கொண்ட இந்திரஜாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளன
ரோபோ சங்கர் செம ஹேப்பி: தனது மகள் இந்திரஜாவுக்கு கடந்த ஆண்டு மார்ச் 24ம் தேதி திருமணம் நடைபெற்றது. சினிமா பிரபலங்கள் பலர் திருமணத்தில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும், சென்னையில் எக்கச்சக்க கூட்டம் கூடிய வரவேற்பு நிகழ்ச்சியையும் நடத்தி முடித்தார் ரோபோ சங்கர். தனது மகள் கர்ப்பமான செய்தியை அறிந்து உற்சாகத்தில் ஆழ்ந்த ரோபோ சங்கர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறுசுவை விருந்துடன் வளைகாப்பு நிகழ்ச்சியையும் கோலாகலமாக நடத்தி அமர்க்களப்படுத்தியிருந்தார். இந்நிலையில், தான் தாத்தா ஆன சந்தோஷ செய்தி அறிந்த ரோபோ சங்கர் தனது பேரனின் பெயர் சூட்டும் விழாவையும் அமர்க்களப்படுத்த காத்திருக்கிறார்.
What's Your Reaction?