மௌனமொழி ஏன் தோழி ???

தமிழ் காதல் கவிதைகள்

Jan 22, 2025 - 11:06
Jan 22, 2025 - 11:06
 0  2
மௌனமொழி ஏன் தோழி ???

மௌனமொழி ஏன் தோழி ???
முதல்முறை நீ என்னைப் பார்த்த பொழுது

உன் காந்தப் பார்வையில் கந்தலாகிப் போனேனடி

என் உயிரின் அணுவில் உன் பெயரை உச்சரிக்க வைத்தாயடி

ஒவ்வொரு முறையும் என் இதயத்துடிப்பின் உச்சரிப்பு நீயனாயடி தோழி

 

காதோரம் உன் கம்மல்கள் என்றும் என் முகம் பார்த்து உனைப்பிடிக்கும்

என்று தலையசைத்ததே என் தோழி ..

உன் மைபேனா கூட என் பெயரை அதிகமாக கிறுக்கித்திரிந்த  போதுதான் உணர்ந்துகொண்டேன்,

என் மேல் நீ கொண்ட காதலை

உன் மனம் திருடிய கள்வனாய்..

நான் உன்னைக் கடக்கும்போது ,

உன்னையறியாமல் உன் வளையல்களின் ஓசை என் பெயரை அழைத்து மகிழுதடி,

நீ சூடும் மலர் கூட நான் விரும்பும் மல்லிகையாய் என் வீட்டு

திசையை நோக்கி மணம்வீசுதடி தோழி

 

நான் விரும்பும் வண்ணத்தில் உடையணிந்து நீ, நான் போகும் பாதையில்

எனைக் காண காத்திருந்தது இன்னும் நினைவில் நிழலாடுதடி,

ஒவ்வொரு முறை நீ  விடுமுறைக்குச்  செல்லும்போதும்

உன்  நினைவாய்  பொருட்கள்  சிலவற்றை  என்னிடம்  விட்டுச்  சென்றது,

நான் வாங்கிய பதக்கங்களாய் ஞாபகமிருக்கின்றது ஆருயிர் தோழி

நீ சோர்ந்து நின்ற பொழுதும், தவறிவிழும் பொழுதும்

உன் கைகள் என் தோள்களை மட்டும் தேடிப்பிடிததே தோழி,

 

உன்னைப் பிடிக்கும் என்று நான் சொன்னதும்,

இதழோரம்  புன்னகை உதிர்த்துத் திரும்பியதும்,

காதல் கடிதம் கொடுத்து என்

காலங்களை கார்காலமாய் மாற்றியது நீ தோழி

யுகங்கள்பலகடப்பினும்நான்உன்நாயகனென்றுஉன்தோழிகளிடம்

நீ கூறிய நிஜம் இன்னும் என்னை சிரிக்க வைக்குதடி …..

இத்தனைமுறையும்உனைநினைக்கச்செய்துவிட்டுநான்இன்று

கேட்கும்விரும்புகிறாயாஎன்றகேள்விக்குமட்டும்

இன்னும் மௌனமொழி ஏன் தோழி?

 

கல்லூரிமாறினாலும்காலங்கள்கடந்தாலும்நமக்குள்காதல்மாறாது

என்று தினம்தினம் நீ சொன்னது பொய்யானது ஏன் தோழி?

 

உனக்குப்பிடித்தபாடல்சிலஒலிக்கும்போதுகுறுஞ்செய்திஅனுப்பி

எனைப்பார்க்கசெய்துஎனக்காகபிறந்தவள்நீ

என்று உணரச்செய்தது ஏன் தோழி?

 

பிரிவுகள்என்றும்காதலைஆழப்படுத்தும்என்றுபாடும்

கவிஞனின் கூற்றையும் பொய்க்கவைத்தாயடி  தோழி,

கண்ணோரம்காதல்காட்டிஇதழோரம்என்னைப்பிடிக்கவில்லை

என்ற புதுமொழி புரியவில்லை தோழி.

 

எனக்கும்இருக்கும்இத்தனைநண்பர்களுடன்பழகினினும்நீசொல்லும்

நட்போடு பழகினேன் என்ற நட்பின் இலக்கணம் விளங்கவில்லை தோழி

 

இதோநான்உன்னைப்பிரியும்இறுதிநொடிஇதுதான்

என்னைப் பிடித்ததென்று காதலித்தாய் என்று சொல்லாமல்

கொல்லும் மௌனமொழி இன்னும் ஏன் தோழி?

என்வாழ்க்கைத்தேர்வுத்தாளில்நான்எழுதியவினாக்களுக்கு

விடைதெரியாமல்இன்னும்தோல்வியடைகிறேன்

உனை எண்ணும் பொழுது மட்டும்….

 

நீர்கோர்த்துத்திரியும்மேகம்போல்உன்நினைவுகளை

என் மனது சுமையாக்கித் திரிகின்றன,

மழையாகப் பெய்யத் தெரியாமல்…….

 

இன்னும் மௌனமொழி ஏன் தோழி?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow