கொழுப்பை குறைக்கணுமா? இஞ்சியை இப்படி பயன்படுத்துங்க! - GINGER WATER

தனித்துவமான மருத்துவ குணம் மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக உலக முழுவதும் இஞ்சி அறியப்படுகிறது. ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் நிறைந்துள்ள இஞ்சி, உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகின்றது. இஞ்சியை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளதாக ஆயுர்வேதம் கூறுகிறது. இருப்பினும், ஒரு மாதத்திற்கு தொடர்ந்து இஞ்சி தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..

Jan 15, 2025 - 17:25
Jan 15, 2025 - 13:48
 0  5
கொழுப்பை குறைக்கணுமா? இஞ்சியை இப்படி பயன்படுத்துங்க! - GINGER WATER

இயற்கை மருந்தான இஞ்சி, இது பல நூற்றாண்டுகளாக பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் ஆயுர்வேத நூல்களில் மிக முக்கியமான மூலிகைகளில் ஒன்றாக இஞ்சி கருதப்படுகிறது. பலர் தினமும் டீயில் இஞ்சி கலந்து குடிப்பார்கள். ஏனெனில் இது தேநீரின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி, தொண்டை வலி போன்ற பிரச்சனைகளில் இருந்தும் உடனடி நிவாரணம் அளிக்கிறது. இந்தியாவில், பெரும்பாலான மக்கள் பல வகையான உணவுகளில் இஞ்சியை சேர்க்கிறார்கள்.

நன்மைகள்:

  • இஞ்சியில் ஆன்டி ஆக்ஸிடண்ட்டுகள் நிறைந்துள்ளதால், சூடான இஞ்சி தண்ணீரை குடித்து வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கிறது. அஜீரணம், வயிற்று வலி, வாயு தொல்லை மற்றும் குமட்டல் பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சியை உட்கொள்வதன் மூலம் உடனடி நிவாரணம் பெறலாம். இஞ்சி மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை நீக்குகிறது மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • இஞ்சி தண்ணீரை ஒரு மாதம் குடித்து வந்தால், உடல் எடை நல்ல மாற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது வெறும் வயிற்றில் இஞ்சி நீரைக் குடிக்கும் போது, வளர்சிதை மாற்றமடைந்து, இது உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது மற்றும் பசியையும் குறைக்கிறது. நாள் முழுவது பசி எடுப்பதை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்கும்.
  • கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் இஞ்சி உதவுகிறது. சூடான இஞ்சி தண்ணீர் அல்லது இஞ்சி டீ குடிப்பதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும். இது இதய ஆரோக்கித்தை பராமரிக்க உதவுகிறது.
  • இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் எனும் பண்பு, மூட்டு மற்றும் தசை வலியை குறைக்க உதவுகிறது. இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலி, தசை வலி மற்றும் மாதவிடாய் பிரச்சனைகளை குறைக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இஞ்சி நீர் தோல் தொடர்பான பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாக்கிறது.
  • 2001 ஆம் ஆண்டு ருமாட்டாலஜி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4 வாரங்களுக்கு தொடர்ந்து 2 கிராம் இஞ்சி கொடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது . இதன் விளைவாக, இஞ்சியின் பயன்பாடு கீல்வாத வலியைக் குறைப்பது மட்டுமல்லாமல், மூட்டுகளின் செயல்பாட்டை மேம்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டது.
  • இஞ்சி மற்றும் மஞ்சள் கலந்த நீரை கொதிக்க வைத்து குடித்து வர, அல்லது இஞ்சி டீ குடிப்பதால் கூடுதல் பலனை பெறலாம். இது, சளி மற்றும் இருமல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow