New year resolution ideas in tamil
இந்த ஆண்டில் நாம் பல விஷயங்களை மாற்ற வேண்டும் என்ற திட்டத்தில் இருப்பாேம். அப்படி, நாம் நம்மை மேம்படுத்திக்கொள்ள சில உறுதிமொழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
Top 10 New Year Resolutions 2025 : புது வருடம் நம்மை விட்டு வெகு தாெலைவில் இல்லை. எப்போதும் ஒரு புது வருடம் ஆரம்பிக்கிறது என்றால், நாம் உறுதி மொழி எடுப்பது வழக்கம். ஒரு சிலர், இந்த உறுதி மொழிகளை கடைசி வரை பின்பற்றுவர். ஒரு சிலர், இதை பாதியிலேயே விட்டு விடுவர். அந்த வகையில், இந்த வருடம் ட்ரெண்டிங்கில் இருக்கும் டாப் 10 உறுதி மொழிகள் குறித்தும், வாழ்வில் வெற்றி பெற அவை எப்படி உங்களுக்கு உதவும் என்பது குறித்தும் இங்கு பார்ப்போம்.
1.உடல் பராமரிப்பு:
2025ஆம் ஆண்டு மட்டுமல்ல, எந்த புது வருடம் பிறந்தாலும், அனைவரும் கூறுவது “உடல் எடையை குறைக்கப்போகிறேன்” என்பதுதான். அதுதான் இந்த வருடத்தில் பலரால் எடுக்கப்படும் உறுதிமொழியாக இருக்கிறது. இதை உறுதி மொழியோடு நிறுத்தி விடாமல், அதை பின்பற்றவும் ஆரம்பிக்க வேண்டும்.
2.பயணம்:
பயணம் செய்ய பிடித்தவர்கள் மட்டுமல்ல, அதிகமாக பயணம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட “மாதத்தில் ஒரு ட்ரிப் போக வேண்டும்” என்ற உறுதி மொழியை எடுக்கின்றனர். ஆனால் பல சமயங்களில் கையில் இருக்கும் பட்ஜெட் அதற்கு ஒத்துழைக்காமல் போகலாம். அப்படி பட்ஜெட் இல்லாத சமயங்களில் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு சிறிய இடத்திற்கு சென்று வரலாம்.
3.புதிய பழக்கங்கள்:
நம் அனைவருக்கும் பிடித்த பழக்கம் என்ற ஒன்று இருக்கும். ஆனால் நம் நாம் பிசியாக வலம் வருவதால் இதற்கு நேரம் இல்லாமல் இருக்கும். ஆனால் இந்த வருடத்தில் நம் மனதையும் நம்மையும் பார்த்துக் கொள்ள சில பிடித்த விஷயங்களை செய்வது, அவசியமாகும். எனவே, புதிய பழக்கங்களை அல்லது பிடித்த பழக்கங்களை செய்வதை வழக்கமாக உறுதி எடுக்க வேண்டும்.
4.பட்ஜெட்:
அனைவருக்கும் பணத்தை சேமிக்க வேண்டும், சேமித்த பணத்தை சரியான முறையில் செலவு செய்ய வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால் பெரும்பாலான சமயங்களில் நாம் அதை செய்வதில்லை. இந்த வருடத்திலாவது செலவுகளை குறித்து சேமிப்புகளை அதிகரித்து முறையாக வாழ கற்றுக் கொள்ள உறுதி எடுங்கள்.
5.தீய பழக்கங்கள்:
சிலருக்கு புகைப்பிடிப்பது, மது குடிப்பது போன்ற தீய பழக்கங்கள் இருக்கும். அடிக்கடி குடிப்பதில்லை என்றாலும், எப்போதாவது குடிப்பவர்களாக இருப்பர். ஆனால், இது உதுவும் இல்லாமல் முழுமையாக எந்த பழக்கமும் இல்லாதவர்களாக மாற வேண்டும் என நினைப்பர்.
6.புத்தகம் படிப்பது:
பலர் புத்தக பிரியர்களாக இருப்பர், சிலருக்கு புத்தகம் படிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அவர்கள் எடுக்கும் உறுதி மொழி “இனி நிறைய புத்தகம் படிக்க வேண்டும்” என்பதுதான்.
7.சமையல் கற்பது:
சமையல், மனிதர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய திறன்களுள் ஒன்றாகும். டெலிவிரி ஆப்களை நம்பாமல், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எப்படி சமைக்க வேண்டும் என்பதை நாம் கற்க வேண்டும்.
8.தூக்கம்:
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் யாருமே நேரத்திற்கு உறங்குவதில்லை. அனைவரும் பகல் நேரம் போல இரவில் உலா வந்து கொண்டிருக்கின்றனர். எனவே, தினசரி 8 முதல் 9 மணி நேரம் உறங்க வேண்டும் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்ளுங்கள்.
9.குடும்பத்தினருக்கு முக்கியத்துவம்:
பலர், அலுவலகத்திலும், நண்பர்களுடனும் அதிக நேரம் செலவிடுவர். அப்படி இல்லையென்றால் தங்களது போனில் மூழ்கியிருப்பர். இப்படி, நாம் பிற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பதிலாக குடும்பத்தினருடனும் சில மணி நேரங்களை செலவு செய்ய வேண்டும் என உறுதி எடுங்கள்.
10.டிஜிட்டல் சாதனங்களில் இருந்து தள்ளியிருத்தல்:
நம்மில் பலர் போன், லேப்டாப் என நம்மை சுற்றி இருக்கும் டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமையாகி இருக்கிறோம். எனவே, அதை குறைத்து விட்டு, கொஞ்சம் ரியல் உலகில் வேலை பார்க்க வேண்டும்.
What's Your Reaction?