சயிஃப் அலி கானுக்கு கத்திக்குத்து!!
Saif Alikhan Attack news
சயிஃப் அலி கானுக்கு கத்திக்குத்து!!
இந்திய அளவில் பிரபலமாகவும், பெரிய நடிகராகவும் இருப்பவர், சயிஃப் அலி கான். இன்று அதிகாலை இவர் வீட்டிற்குள் நுழைந்த திருடன், இவரை 6 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி இருக்கிறான்.
சயிஃப் அலி கானை, தமிழகத்தில் பலர், விளம்பரங்கள் வாயிலாகவும், சில தென்னிந்திய படங்களிலும் பார்த்திருப்போம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பிரபாஸ் நடிப்பில் வெளியான அதி புருஷ் படத்தில் ராவணனாக நடித்தது இவர்தான். அதே போல, கடந்த ஆண்டு வெளியான தேவாரா பாகம் 1 படத்தில் வில்லனாக வந்ததும் இவர்தான். இப்படி வரிசையாக படங்களில் நடித்து வரும் இவர், இந்த புத்தாண்டை தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டில் கொண்டாடி விட்டு, சில நாட்கள் தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
ஜனவரி 16ஆம் தேதியான இன்று, அதிகாலை 2.30-3.30 மணியளவில் திருடன் ஒருவன் இவர் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறான். இதையடுத்து சயிஃப் அலி கான், அவரை சண்டை போடும் போது அந்த திருடன் 6 முறை அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி இருக்கிறான். இந்த சம்பவத்தை அடுத்து, சயிஃப்பை அவரது மகன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சயிஃபிற்கு முதுகெலும்பிற்கு அருகில் ஒரு காயம் ஆழமாக ஏற்பட்டிருக்கிறது. அதே போல இன்னாெரு காயமும் ஆழமாக இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.
நடந்தது என்ன?
சயிஃப் அலி கானின் வீட்டில் கடந்த 4 வருடங்களாக வேலை பார்த்து வரும் பெண் ஒருவர்தான் முதலில் அந்த திருடன் வீட்டினுள் நுழைந்ததை பார்த்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணிடம் அவன் மீண்டும் மீண்டும் ரூ.1 கோடி கொடுக்க வேண்டும் என கேட்டதாகவும், இதையடுத்து அந்த பெண் சத்தம் போட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சத்தம் கேட்டு சயிஃப் அலி கான் வந்து, திருடனுடன் சண்டை போடும் போது அவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
திருடனின் புகைப்படம்..
தற்போது, சயிஃப் அலிகானை தாக்கிய திருடனின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அந்த திருடன் கழுத்தி ஆரஞ்சு நிற கர்சிஃபை சுற்றியிருக்கிறான். கூடவே, தனது தோளில் ஒரு பேக்கையும் மாட்டியிருக்கிறான். ஜீன்ஸ்-டீ-ஷர்ட் அணிந்துள்ள அவன், கேமராவை பார்த்துவிட்டு செல்லும் காட்சி பதிவாகியிருக்கிறது. போலீஸார், தற்போது இதை வைத்து அந்த திருடன் யார் என்பதை தேடி வருகின்றனர்.
சயிஃப் அலி கானின் வீடு, மும்பையில் உள்ள பாந்தரா நகரின் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது. இதில், 4 மாடிகள் இவருக்கு சொந்தமானதாகும். இங்கு மாட்டப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில்தான் அந்த திருடனின் முகம் சிக்கியுள்ளது. பெரிய நட்சத்திரத்தின் வீட்டிலேயே இப்படி ஒரு விஷயம் நடந்திருப்பது, பாலிவுட்டில் மட்டுமன்றி, இந்த விஷயம் தெரிந்த பலரையும் உலுக்கியிருக்கிறது.
திருடன் யாரென்று இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அவன் யாரென போலீஸார் மும்பையின் மூலை முடிக்கெங்கும் தேடி வருகின்றனர். மக்கள் பலர், பாந்த்ரா நகரில் இருக்கும் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாக கூறி வருகின்றனர். இன்னும் சிலர், இதனுடன் சல்மான் கான் மீது இதே போல தாக்குதல் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது குறித்தும் பேசி வருகின்றனர்.
What's Your Reaction?