தோல் அரிப்பு பிரச்சனையா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க, அறிகுறி குறையும்
Skin problems and Remedies
தோல் அரிப்பு பிரச்சனையா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க, அறிகுறி குறையும்!
படை நோய்,. தோல்களில் ஏற்படும் இந்த நோய் அடிக்கடி அரிப்பு, தோல் மேற்பரப்பில் சிவப்பு புடைப்புகள் போன்றவற்றை ஏற்படுத்தும். இந்த படை நோய் யூட்டிகேரியா என்று அழைக்கப்படுகிறது. இந்த படை நோய்களுக்கு என்ன காரணம் என்பதை அறிவதன் மூலம் அதை மீண்டும் ஏற்படாமல் தடுக்கலாம். இந்த படை நோய் குணப்படுத்த உதவும் வீட்டு வைத்தியம் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
படை நோய் தோல் அரிப்பு பிரச்சனையா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க, அறிகுறி குறையும்!
படை நோய் தோல் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கலாம். இந்த புடைப்புகள் வடிவத்தில் வேறுபடலாம். உடலில் எங்கு வேண்டுமானாலும் தோன்றலாம். பொதுவாக உணவு பொருள் ஒவ்வாமை அல்லது மருந்துகளுக்கு ஒவ்வாமை எதிர்வினை காரணமாக இவை தோன்றலாம். இது சில வாரங்கள் வரை இருக்கும். நாள்பட்ட படை நோய் எனில் ஆறு வாரங்கள் மேலும் நீடிக்கலாம். இந்த படை நோய் இருந்தால் என்ன மாதிரியான வீட்டு வைத்தியம் கைகொடுக்கும் என்பதை தெரிந்துகொள்வோம்.
படை நோய் அறிகுறிகள் எப்படி இருக்கும்?
படை நோய் ஏற்படுவதற்கான அறிகுறி பொதுவாக சொல்வதென்றால் தோலில் அரிப்பு அல்லது புடைப்புகள் தோன்றும். இது சிறிய அல்லது பெரிய திட்டுகளாக இருக்கலாம். இந்த அரிப்பு தீவிரமாக இருக்கலாம். பெரும்பாலும் இரவு நேரங்களில் மற்றும் வெப்பம் அதிகம் இருக்கும் போது வியர்வையுடன் மோசமாகி அரிப்பு ஏற்படுத்தும். சில நேரங்களில் தோலின் ஆழமான அடுக்குகளின் வீக்கம் கண்கள் மற்றும் உதடுகளை சுற்றி ஏற்படலாம். காரணங்கள் அறியப்பட்டு அதை தவிர்க்கு வரை இவை மிண்டும் மீண்டும் வரலாம்.
தோல் எரிச்சலூட்டும் பொருள்களை தவிர்க்கவும்
சருமத்துக்கு எரிச்சலூட்டும் பொருள்கள் ஏதேனும் பயன்படுத்துவதாக இருந்தால் அதை தவிர்க்கவும். சில சோப்புகள் சருமத்தை உலர்த்தலாம். படை நோய் இருக்கும் போது அரிப்பு ஏற்படுத்தலாம். உணர்திறன் வாய்ந்த சருமத்துக்கு விற்கப்படும் இலேசான சோப்பு பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள். பொதுவாக வாசனை மற்றும் எரிச்சலூட்டும் இராசயனங்களை தவிர்க்க வேண்டும். சருமத்துக்கு ஒவ்வாமை உண்டு செய்யும் மாய்சுரைசர் அல்லது லோஷன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் சரும பராமரிப்பு நிபுணரின் ஆலோசனையுடன் குளித்த உடன் மாய்சுரைசர் பயன்படுத்துவது அரிப்புகளை தடுக்க செய்யும்.
படை நோய்க்கு கற்றாழை உதவுமா?
கற்றாழை இயற்கையான அழற்சி எதிர்ப்பு கொண்டவை. நேஷனல் செண்டர் ஃபார் காம்ப்ளிமெண்டி அண்ட் இண்டகிரேட்டிவ் ஹெல்த் டிரஸ்டட் கூற்றுப்படி கற்றாழை சருமத்தில் பயன்படுத்துவது முகப்பரு, ஹெர்பெஸ், சிம்ப்ளக்ஸ், சொரியாசிஸ் மற்றும் சருமத்தை பாதிக்கும் நிலையில் இருப்பவர்களுக்கு உதவும். கற்றாழை சருமத்துகு நல்லது என்றாலும் நேரடியாக சருமத்தில் பயன்படுத்துவதற்கு தோல் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது. உணர்திறன் வாய்ந்த சருமம் என்றால் கற்றாழையில் சேர்க்கப்படும் தயாரிப்புகளில் வாசனை அல்லது பிற இராசயனங்கள் சேர்க்கப்படலாம். அதனால் கவனமாக பயன்படுத்துவது அவசியம்.
படை நோய்க்கு குளிர்ந்த ஒத்தடம்
குளிர்ந்த ஒத்தடம் என்பது சருமத்தில் குளிர்ச்சியான ஒன்றை பயன்படுத்துவது. இது எரிச்சல் மற்றும் வீக்கத்தை போக்க உதவும். மெல்லிய துணியை குளிர்ந்த நீரில் நனைத்து அல்லது ஐஸ்கட்டியை சுற்றி பாதிக்கப்பட்ட சருமத்தில் வைத்து ஒற்றி எடுக்கவும். நாள் முழுவதும் தேவைக்கேற்ப எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அதை ஒற்றி வைக்க வேண்டும். இது அரிப்பை கட்டுப்படுத்தி அறிகுறி மேம்படுத்த செய்யும்.
படை நோய் தூண்டுதலை தவிர்க்க வேண்டும்
படை நோய்க்கு காரணங்கள் என்ன என்பதை அறிந்து அதை தவிர்ப்பதன் மூலம் இவை மீண்டும் மீண்டும் வராமல் தடுக்கலாம். சிலருக்கு மகரந்தம், சிலருக்கு உணவுகள், சிலருக்கு மருந்துகள் மற்றும் பூச்சி கடித்தல் போன்றவை படை நோய்க்கான காரணங்களாக இருக்கலாம். எனினும் அடிப்படை காரணம் பொறுத்து அதை தடுப்பதன் மூலம் அவை மேலும் விரிவடைவதை தடுக்கலாம். சாத்தியமான தூண்டுதல்களை கண்காணிப்பதன் மூலம் இதை தவிர்க்க முடியும். மேலும் இதற்கு சிகிச்சை எடுத்துகொள்வதன் மூலம் சருமத்தை சுத்தமாக வைத்திருக்க முடியும்.
காலமைன் லோஷன்
அமெரிக்கன் அகாடமி அஃப் டெர்மட்டாலஜி அசோசியேஷன் கூற்றூப்படி ,காலமைன் லோஷன் அரிப்பு எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்தலாம். துத்தநாக ஆக்சைடு மற்றும் ஃப்ரிக் ஆக்சைடிலிருந்து தயாரிக்கப்படும் இந்த காலமைன் லோஷன் இதமானது அரிப்பு எதிர்ப்பு பண்புகளை கொண்டது. சருமம் பாதிக்கப்பட்ட இடத்தில் இதை பயனப்டுத்துவதால் சருமம் குளிர்விக்கப்படும் அசெளகரியம் குறையும். சருமத்தில் மென்மையாகவும் எளிதாகவும் பயபடுத்தக்கூடியது இது. இது இலேசான படை நோய்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
படை நோய் கட்டுப்படுத்த ஓட்ஸ் மீல் குளியல்
2018 ஆம் ஆண்டு Oxidative Medicine and Cellular Longevity ஜர்னலில் வெள்வந்த ஆய்வு ஒன்றின் படி ஓட்ஸ் சருமத்துக்கு நன்மை பயக்கும் படை நோய்களில் இருந்து நிவாரணம் பெற உதவும். ஓட்மீல் அரைத்து வெதுவெதுப்பான குளியல் நீரில் சேர்க்க வேண்டும். இந்த தோல் எரிச்சலை தணிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. இது தோலில் ஒரு பாதுகாப்பு தடையை உருவாக்கி ஈரப்பதத்தை அளிக்கிறது. இது அழற்சியை குறைக்கிறது. பெரிய அல்லது சருமத்தில் பரவலான படை நோய் வெடிப்புகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இது சருமத்தை அமைதிப்படுத்தவும் அரிப்புகளை போக்கவும் செய்கிறது.
படைநோய் தடுக்க மன அழுத்தம் இல்லாமல் இருப்பது அவசியம்
மன அழுத்தம் ப் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும். படை நோய்களை தூண்டும் அல்லது மோசமாக்கும். அதனால் நிவாரணம் பெற மன அழுத்த மேலாண்மை நுட்பங்களை பின்பற்ற வேண்டும். மன அழுத்தம் குறைய யோகா, மூச்சு பயிற்சி. தியானம் போன்றவற்றை தொடர்ந்து செய்யலாம். இது உடலில் மன அழுத்தம் தூண்டும் கார்டிசொல் அளவை குறைக்க செய்து மனதை தளர்வாக வைத்திருக்க செய்கின்றன. மன அழுத்தம் இல்லாமல் இருப்பது படை நோய்களை தடுக்கலாம். அல்லது அதன் தீவிரத்தை குறைக்கலாம்.
படை நோய் இருந்த உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும்
போதுமான நீரேற்றத்துட இருப்பது தோல் நெகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்யும். படை நோய் அதிர்வெண்ணை இவை குறக்கலாம். ஒவ்வாமை எதிர்வினைகளை தூண்டக்கூடிய நச்சுக்களை வெளியேற்ற உடல் நீரேற்றமாக இருக்க வேண்டும். உடலில் திரவம் அதிகரிக்க நீருடன் இளநீர், மூலிகை தேநீர், எலக்ட்ரொலைட் நிறைந்த பானங்கள் கொண்டிருப்பது சருமத்தின் நீரேற்றம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்யும்.
இறுதியாக
அறிகுறிகள் இந்த வகைகளில் கட்டுக்கடங்காத போது அல்லது இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவரிடம் பேச வேண்டும். இதன் மூலம் காரணம் அறிந்து அறிகுறிகளை போக்க மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். மேலும் படை நோய் தூண்டுதலுக்கான காரணம் அறிந்து தவிர்ப்பதன் மூலம் மீண்டும் வராமல் தடுக்கலாம்.
What's Your Reaction?