நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மசாலா டீயை எப்படி செய்வதென்று தெரியுமா?

Masala Tea and Benefits in tamil

Jan 20, 2025 - 20:10
 0  4
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மசாலா டீயை எப்படி செய்வதென்று தெரியுமா?

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மசாலா

 டீயை எப்படி செய்வதென்று தெரியுமா?

குளிர்காலம் வந்தாலே காய்ச்சல், சளி வந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் அனைவரும் தோன்றும். வெயில் கால சூடு முடிந்து குளிர்கால குளிர்ச்சி தொடங்கியதுமே அனைவருக்கும் மகிழ்ச்சியாக தான் இருக்கும். இருந்தாலும், அச்சுறுத்தலின் காரணமாக, சாதாரண சளி பிரச்சனை வந்தால் கூட பயமாக தானே இருக்கும். எனவே, மிகுந்த குளிர்ச்சியில் இருந்து தப்பிக்க உடலை சூடாக வைத்திருக்க முயல வேண்டும். எனவே, அதற்கு உதவக்கூடிய உணவுகள் மற்றும் சமையல் பொருட்களை பார்த்து பார்த்து வாங்கி வைத்துக் கொள்ள வேண்டிய நேரமிது.

குறிப்பாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகளில் முதலீடு செய்வது முக்கியம். இதைக் கருத்தில் கொண்டு, குளிர்காலத்திற்கு ஏற்ற மசாலா டீ பவுடர் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் செய்திடலாம். தற்போது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சுவையான மசாலா டீ பவுடரை எவ்வாறு தயாரிப்பது என்பதை தெரிந்து கொள்வோம். இது குளிர்காலத்தில் அதிகப்படியான குளிர்ச்சி மற்றும் காய்ச்சலிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவிடும்.

மசாலா டீ பவுடர் தயாரிக்கத் தேவையான பொருட்கள்:

* பச்சை ஏலக்காய் - 4 டீஸ்பூன்

* கருப்பு மிளகு - 2 டீஸ்பூன்

* கிராம்பு - 2 டீஸ்பூன்

* கருப்பு ஏலக்காய் - 4

* இலவங்கப்பட்டை - 5 கிராம்

* ஜாதிக்காய் - 1/2 துண்டு

* பெருஞ்சீரகம்(சோம்பு) - 1 டீஸ்பூன்

* அதிமதுரம் - 1 டீஸ்பூன்

* துளசி இலைகள் - 2 டீஸ்பூன்

* துளசி விதைகள் - 1 டீஸ்பூன்

* சுக்குப்பொடி- 3 டீஸ்பூன்

மசாலா டீ பவுடர் செய்வது எப்படி?

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உலர்ந்த பொருட்களையும், ஒரு வாணலியில் சேர்த்து நன்கு வறுத்து எடுத்து கொள்ளவும். வறுத்த பொருட்கள் அனைத்தையும் தனியாக வைத்து நன்கு குளிர்விக்க அனுமதிக்கவும். நன்கு உலர்ந்த பொருட்கள் அனைத்தும், ஒரு மிக்ஸர் ஜாரில் சேர்த்து மைய அரைத்து உலர்ந்த மற்றும் சுத்தமான ஜாடியில் போட்டு வைத்துக் கொள்ளவும். இந்த மசாலா டீ பவுடர் சுமார் 4 முதல் 6 மாதங்கள் வரை வைத்துக் கொள்ளலாம்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மசாலா டீ தயாரிக்கும் முறை:

* ஒரு பாத்திரத்தில், 2 1/2 கப் அளவிற்கு தண்ணீர் மற்றும் 2 கப் அளவிற்கு பால் ஆகிய இரண்டையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

* அத்துடன் சுவைகேற்ப சர்க்கரையை சேர்க்கவும். இதை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வந்து, அதனுடன் 2 டீஸ்பூன் தேயிலை இலைகள் மற்றும் 1 டீஸ்பூன் மசாலா டீ பவுடரை சேர்க்கவும்.

* சுமார் 4-5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கினால், சுவையான மசாலா டீ தயார். இந்த டீ உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, புத்துணர்ச்சியையும் வழங்கக்கூடியது.

இது எவ்வாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது?

அனைத்து பருவகால பாக்டீரியாக்களிலிருந்தும் நமது உடலைப் பாதுகாக்க உதவும் ஊட்டச்சத்துக்களின் மிகப்பெரிய ஆதாரமாக இந்திய மசாலாக்கள் உள்ளன என்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். இப்போது மசாலா டீ குடிப்பதால் உடல் ஆரோக்கியம் எவ்வாறு மேம்படுகிறது என்பதைக் காண்போம்.

கிராம்பு

குளிர்காலத்தைப் பொறுத்தவரை, காய்ச்சல் மற்றும் மார்பு சளி அறிகுறிகளை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு பாரம்பரிய வீட்டு வைத்தியங்களில் சிறந்ததாக கிராம்பு திகழ்கிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பது மட்டுமின்றி, ஆன்டி-வைரல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் காணப்படுகிறது.

பட்டை

இலவங்கப்பட்டையில் இருக்கக்கூடிய ஆக்ஸிஜனேற்ற பண்புகள், உடலை பல்வேறு வகையான நோய்த்தொற்றுகள் மற்றும் ஒவ்வாமைகளை எதிர்த்துப் போராடி காத்திட உதவும்.

மிளகு

கருப்பு மிளகின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சளி மற்றும் இருமலை குணப்படுத்த உதவுகின்றன. இது மார்பு சளியை அழிக்க உதவுகிறது. இது ஒரு நல்ல ஆன்டி-பயாடிக் ஆக செயல்படும். அதுமட்டுமல்லாது, இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

துளசி

கடைசியாக துளசி, இது பல்வேறு வகையான சுவாசக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. சளி மற்றும் இருமல் முதல் மூச்சுக்குழாய் அழற்சி வரை அனைத்தையும் சரி செய்திட துளசி உதவக்கூடும். துளசியில் உள்ள நோயெதிர்ப்பு பண்புகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow