பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர் யார் தெரியுமா?
பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர் இந்தியர்கள் தான். பூஜ்ஜியத்திற்கு இடமதிப்பு சிந்தனையை முதன் முதலில் கொடுத்தவர் இந்தியாவில் வாழ்ந்த முதல் ஆர்யபட்டர் ஆவார்.
கணிதத்திற்கு எண்கள் தான் அடிப்படை. அந்த எண்களுக்கு ஆதாரமாக இருப்பது பூஜ்ஜியம் “0” என்கிற எண் ஆகும். இதை தமிழில் “சுழியம் “என அழைக்கின்றனர். இந்த பூஜ்ஜியத்தை யார் கண்டுபிடித்தார்கள்? என்பது பற்றி இந்த பதிவில் நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் நகரத்தில் இருக்கும் மிகப் பழமையான ஆலயம் ஒன்றில் இருந்த பூஜ்ஜிய எண்ணின் “0” குறியீடு செதுக்கப்பட்டுள்ளது. அந்த குறியீட்டில் இருக்கும் பூஜ்ஜிய எண்ணின் வடிவை தான் தற்காலத்தில் அனைவரும் பயன்படுத்தி வருகிறோம்.
பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர் யார்?
பூஜ்ஜியம் எனும் எண் உருவாக்கப்படுவதற்கு முன்பு பூஜ்ஜியத்திற்கு “சூனியம், ஒன்றுமில்லாதது, வெறுமை” போன்ற வார்த்தைகளே பயன்படுத்தப்பட்டன. மிகப் பழங்காலம் முதலே வேறு பல நாடுகளில் பூஜ்ஜியத்திற்கு வேறு பல வடிவங்கள் பூஜ்ஜியத்திற்கு எண்களாக பயன்படுத்தியுள்ளனர். எனினும் நாம் அனைவரும் தற்போது பயன்படுத்தும் பூஜ்ஜியத்திற்க்கான எண் வடிவை கொடுத்தது,
5-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் பாடலிபுத்திர நகரத்தில் வாழ்ந்த இந்தியரான “ஆரியபட்டர்” என உலக வரலாற்றறிஞர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த பூஜ்ஜியத்தை அடிப்படையாகக் கொண்டு “0=a, a-0=a, 0 0=0 ,ax0=0,0/a=0” என்கிற கணித சமன்பாட்டை உருவாக்கியவர் 6 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த மற்றொரு புகழ்பெற்ற கணித மேதையான “பிரம்மகுப்தர்” ஆவார்.
இந்தியாவில் “0” கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இந்தியாவோடு வணிகத் தொடர்பில் இருந்த அரேபியர்கள் இந்தியர்களிடம் கற்ற கணித சமன்பாடுகள், சூத்திரங்களை அவர்கள் நாட்டில் பயன்படுத்தினர். ஐரோப்பியர்கள் அரபு நாடுகளில் வியாபாரம் செய்ய வந்த போது, அரேபியர்கள் அறிந்த இந்த கணித முறையை கற்று, தங்களின் ஐரோப்பிய கண்டத்திற்கு கொண்டு சென்றனர். இப்படி பூஜ்ஜிய மற்றும் இதர கணித முறை பயன்பாடு இந்தியாவில் இருந்து உலகெங்கும் சென்றடைந்தது.
புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானியும், நோபல் பரிசு பெற்றவரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் “இந்தியர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். இந்தியர்கள் தான் பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தார்கள். அவர்களின் இந்த கண்டுபிடிப்பால் தான் தற்போது விஞ்ஞானமும், கணிதமும் வளர்ந்துள்ளன” என பாராட்டியுள்ளார்.
What's Your Reaction?