இரவில் பால் குடித்தால் உடல்கெட்டு விடுமா.? மருத்துவர்கள் கூறுவது என்ன.?!
இரவு நேரத்தில் பால் குடிப்பதால் நன்மையா? தீமையா என்று பல்வேறு விவாதங்கள் இருந்து வருகின்றன. உறக்கத்தை மேம்படுத்தக்கூடிய ட்ரிப்டோபன் மற்றும் மெக்னீசியம் பாலில் இருப்பதால் இரவு நேரத்தில் பால் குடிப்பது உடலுக்கு நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்
நல்ல உறக்கம்
இரவில் பால் குடித்தால் செரிமான பிரச்சனை மற்றும் உடல் உபாதை ஏற்படலாம் என மறு தரப்பினர் அதனை மறுக்கின்றனர். உண்மையில் பால் குடிப்பதால் உடலுக்கு நன்மைகள் தான் அதிகம், நன்றாக தூக்கம் வருவதுடன் அதில் இருக்கும் விட்டமின்கள் நம் உடலுக்கு நன்மையை செய்கின்றன என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அழகை தரும் பால்
பால் செரிமானத்தை ஒருபோதும் தடுக்காது என்று அவர்கள் திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர். இரவு நேரத்தில் பால் குடிப்பதால் நம் உடல் ஈரப்பதமாகவும், மென்மையாகவும் இருக்கும். இதனால், அழகும், ஆரோக்கியமும் மேம்படும். ஒருவரின் ஆரோக்கிய தேவைகளை பொறுத்து பாலின் நன்மை, தீமை அமைகிறது.
மருத்துவ ஆலோசனை
பொதுவாக பால் உடலுக்கு நல்லது தான் அவரவர் உடலின் தன்மையை பொறுத்துதான் அது தீங்கு விளைவிக்குமா என்பதை கூற முடியும். எனவே, உங்களுக்கு பால் குடிப்பதால் ஏதேனும் தொந்தரவுகள் இருப்பதாக தோன்றினால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
What's Your Reaction?