ஆடி 18ம் பெருக்கு.. தாலி கயிறு மாற்றும்போது கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்!
ஆடிப்பெருக்கில் நல்ல காரியங்களை துவங்கலாம், சுப பேச்சு வார்த்தைகளை நிகழ்த்தலாம்.
ஆடிப்பெருக்கு என்பது காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடி விவசாயத்தை செழிக்க செய்யும் அற்புதமான நாளாக ஆகும். இந்த ஆடிப்பெருக்கில் எதை வாங்கினாலும் அது பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. ஆடிப்பெருக்கில் சுமங்கலி பெண்கள் தாலி கயிறு மாற்றுவது சிறப்பான அம்சமாக இருக்கிறது. இத்தகைய சிறப்பான நாளாக இருக்கக்கூடிய இந்த ஆடிப்பெருக்கில் செய்ய மறக்கக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. கண்டிப்பாக அதை செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனர். அவை என்னென்ன? என்பதை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்துக் கொள்ளலாம்.
அதனால் தவறாமல் ஆடிப்பெருக்கு அன்று இந்த முக்கியமான சில விஷயங்களை செய்துவிடுங்கள்.
1. முதலில் வீட்டில் பூஜை செய்பவர்கள் மஞ்சளில் பிள்ளையார் செய்து வைக்க மறக்க கூடாது. எந்த ஒரு நல்ல காரியத்தை செய்யும் பொழுது மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு முதல் வழிபாட்டை முடித்துவிட்டு அதன் பிறகு பூஜையை துவங்குவது வெற்றியைத் தரும். பிள்ளையாருக்கு விளக்கேற்றி விட்டு பின்பு அம்பாளுக்கு நெய்வேத்தியம் படைத்து வழிபடுங்கள்.
2. ஆடிப்பெருக்கில் தாலி கயிறு மாற்றுவது மாங்கல்ய பலத்தை அதிகரிக்க செய்யும் எனவே தாலி சரடு அணிந்து இருந்தாலும், கயிறு அணிந்திருந்தாலும் சரட்டில் சிறு மஞ்சள் கயிறாவது இருப்பது நல்லது.
3.அப்படி கயிறு இருக்கும் பட்சத்தில் அதையும் நீங்கள் இந்த நாளில் மாற்றிக் கொள்ளலாம். புதிதாக சரடு அணிபவர்களும் இந்நாளில் சரடு மாற்றிக் கொள்ளலாம்
4. காலை 10:45 மணி முதல் 11:45 மணி வரை நல்ல நேரமாக இருக்கிறது. இந்த நேரத்திற்குள் நீங்கள் தாலி கயிற்றை மாற்றி விட வேண்டும். நல்ல நேரம் பார்க்காமல் கயிறு மாற்றக்கூடாது.
5. ஆடிப்பெருக்கு அன்று சுமங்கலி பெண்கள் 3பேர் அல்லது 5 பேருக்கு மங்கல பொருட்களை தானம் கொடுக்க வேண்டும் என்பதையும் மறக்கக்கூடாது. தாம்பூலத்தோடு மஞ்சள், குங்குமம், வளையல், பூ வைத்து தானம் கொடுத்தால் மாங்கல்ய பலம் நீடிப்பதோடு மட்டுமல்லாமல், குல விருத்தியும் உண்டாகும் என்பது ஐதீகம்
6. ஆடிப்பெருக்கு அன்று வீட்டில் குறையாமல் இருக்க வேண்டிய முக்கிய பொருட்கள் சிலவை உண்டு. அவற்றை முன்கூட்டியே வாங்கி நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும்.
7. அவை அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாய் வற்றல், எண்ணெய் ஆகியவற்றை வாங்கி நிரப்பி வைக்க மறக்க வேண்டாம்.
8. கடைசியாக ஆடிப்பெருக்கில் வாங்க வேண்டிய முக்கியமான ஒரு பொருள் குண்டு மஞ்சள் ஆகும்.
9. அதிக வசதி படைத்தவர்கள் அன்றைய நாள் பொன்னும், பொருளும் வாங்கி குவிப்பார்கள். ஆடிப்பெருக்கில் வாங்கும் பொருட்கள் பன்மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை எனவே நகைக்கடைகளில் அன்றைய நாள் கூட்டம் அலைமோதும்.
10. நம்மால் அவற்றை வாங்க முடியாவிட்டாலும் குண்டு மஞ்சளை வாங்கி வைப்பது அதற்கு இணையான பலன்களை கொடுக்கும் என்ரு சாஸ்திரம் கூறுகின்றது.
What's Your Reaction?