தக்காளி இல்லாத சமையல்... ஆரோக்கியமானதா?நாடு முழுவதும் தக்காளி விலை உயர்வு, காரணம்...
நம் உடலில் நிகழும் வளர்சிதை மாற்றங்களுக்கு வைட்டமின்கள் அவசியம். தக்காளியில் வைட்டமின் ஏ, சி, டி, ஃபோலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன.
கடந்த சில நாள்களாக எக்குத்தப்பாக எகிறிக்கொண்டிருக்கும் தக்காளி விலைதான் தலைப்புச் செய்தியாக இருக்கிறது. அன்றாடச் சமையலில் தவிர்க்கவே முடியாத சில பொருள்களில் தக்காளியும் ஒன்று. பிரியாணி தொடங்கி... சட்னி, சாம்பார் வரை எல்லா அசைவ, சைவ உணவுகளிலும் கூடுதல் சுவை சேர்ப்பது தக்காளிதான். ஆனால், தக்காளி விலையேற்றம், இனி தக்காளி தேவைதானா என்றே யோசிக்க வைத்திருக்கிறது.
சுவை என்பதைத் தாண்டி தக்காளி நம் ஆரோக்கியத்திலும் முக்கியத்துவம் பெறுகிறதா? தக்காளியில் உள்ள சத்துகள் என்னென்ன? தினமும் எந்த அளவில் தக்காளியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்? நிபுணர்கள் விளக்குகிறார்கள்.
What's Your Reaction?