உலகின் மிகப் பெரிய நூலகம்
நண்பர்களே அமைதியான இடம் என்றால் அனைவருக்கும் நியாபகத்திற்கு வருவது நூலகம் தான். நூலகத்திற்கு யாரெல்லாம் செல்வீர்கள் என்று தெரியாது. ஆனால் அங்கு கிடைக்கும் அமைதி வேறு எங்கும் கிடைக்காது. மேலும் அங்கு சென்று படிக்க ஆரம்பித்தால் அதற்கு அடிமையாக தான் இருப்பார்கள். அந்த அளவிற்கு அங்கு ஒரு அமைதி கிடைக்கும். சரி அனைவரின் ஊரிலும் நூலகம் உள்ளதா..? அங்கு அனைவரும் செல்வீர்களா அல்லது அங்கு எத்தனை புத்தகங்கள் இருக்கும் என்று தெரியுமா..? சரி உலகில் மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது தெரியுமா..? வாங்க இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

லைப்ரரி ஆப் காங்கிரஸ் (Library of Congress) என்ற நூலகம் தான் உலகின் மிக பெரிய நூலகம் ஆகும். இது அமெரிக்கா நாட்டில் உள்ளது.
இந்த நூலகம் ஐக்கிய அமெரிக்க நாட்டின் தேசிய நூலகமாக திகழ்கிறது. இந்த நூலகம் பரப்பளவிலும், நூல்களின் எண்ணிக்கையிலும் உலகிலேயே மிகவும் பெரியது ஆகும்.
- 1800 ஏப்ரல் 24 அன்று இந்நூலகம் தொடங்கப்பட்டது.
- இங்கு மூவாயிரத்துக்கும் மேற் பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
- இங்கே சுமார் 15 கோடி ஆவணங்கள் உள்ளன.6 கோடிக்கும் மேற்பட்ட கையெழுத்து மூலப்பிரதிகள் உள்ளன.
- 3 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன.
- 10 கோடிக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இருக்கின்றன.
- சுமார் 50 லட்சம் வழிகாட்டும் படங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
- 30 லட்சம் ஒலிப்பதிவுகள் உள்ளன.
- மொத்தம் 450 மொழிப் பதிவுகள் இருக்கின்றன.
What's Your Reaction?






