விநாயகர் சதுர்த்தி சிறப்பு: சுவையான பூரணக் கொழுக்கட்டை செய்வது எப்படி? (Step-by-Step Recipe)
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கு ஏற்ற பாரம்பரியத் தேங்காய் வெல்லப் பூரணக் கொழுக்கட்டை எளிய முறையில் செய்யும் செய்முறை விளக்கம்.
விநாயகர் சதுர்த்தி திருவிழா என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது சுடச்சுடச் செய்யப்படும் கொழுக்கட்டைகள்தான். விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்தமான, பாரம்பரிய சுவையில் தேங்காய்-வெல்லப் பூரணக் கொழுக்கட்டை எளிதாக வீடிலேயே எப்படிச் செய்வது என்பதை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
Ingredients
- பச்சரிசி மாவு (கொழுக்கட்டை மாவு) - 1 கப்
- தண்ணீர் - 1 1/4 கப்
- நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
- உப்பு - ஒரு சிட்டிகை
- உள் பூரணம் செய்ய:
- துருவிய தேங்காய் - 1 கப்
- பொடித்த வெல்லம் - 3\4 கப்
- ஏலக்காய்த்தூள் - 1\2 தேக்கரண்டி
- நெய் - 1 தேக்கரண்டி
Nutritional Information
- Calories: 100 kcal
- Carbohydrates: 18g
- Protein: 1.5g
- Fat: 2g
- Fiber: 1g
- Sugar: 7g
Directions
1. இனிப்புப் பூரணம் தயார் செய்தல்
-
ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும், துருவிய தேங்காயைச் சேர்த்து 2 நிமிடங்கள் மிதமான தீயில் வறுக்கவும்.
-
அதில் பொடித்த வெல்லம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வெல்லம் கரையும் வரை கிளறவும்.
-
கலவை கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும். இப்போது சுவையான பூரணம் தயார்.
2. மேல் மாவு தயார் செய்தல்
-
ஒரு பாத்திரத்தில் தண்ணீர், ஒரு சிட்டிகை உப்பு மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
-
நீர் கொதித்ததும் அடுப்பைக் குறைத்துவிட்டு, அரிசி மாவைச் சிறுகச் சிறுகச் சேர்த்துக் கட்டியில்லாமல் கிளறவும்.
-
மாவு வெந்து கெட்டியானதும் அடுப்பை அணைத்து, தட்டு போட்டு 5 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
-
கை பொறுக்கும் சூடு வந்ததும், கைகளில் லேசாக நல்லெண்ணெய் தடவி மாவை மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும்
3. கொழுக்கட்டை செய்தல் & அவித்தல்
-
பிசைந்த மாவில் இருந்து சிறிய உருண்டைகளாக எடுத்து, கிண்ணம் போலச் செய்து நடுவில் தயாரித்து வைத்துள்ள பூரணத்தை வைக்கவும்.
-
விளிம்புகளை ஒன்றாகச் சேர்த்து கொழுக்கட்டை வடிவில் மூடவும்.
-
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், இட்லி தட்டில் துணி அல்லது எண்ணெய் தடவி கொழுக்கட்டைகளை வைக்கவும்.
-
மிதமான தீயில் 8 முதல் 10 நிமிடங்கள் வரை ஆவியில் வேகவைத்து எடுத்தால், பஞ்சு போன்ற மென்மையான பூரணக் கொழுக்கட்டை தயார்!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0