ஒரு வரி கவிதை - Tamil One Line Kavithai
One line Kavithai
ஒரு வரி கவிதை - Tamil One Line Kavithai
வலி மறக்க வழி தேடு
ஆணவத்தின் அடையாளம் ஆடம்பரம்
ஒளியாக நீயிருப்பதால் இருளைப்பற்றிய கவலை எனக்கில்லை
மதியும் மனமும் விளையாடுகிறது விதி எனும் நூல் கொண்டு
நீயே உனக்கு என்றும் நீங்கா துணை
மன நிம்மதியின் மாளிகை.. தனிமை
அஞ்சியும் வாழாதே, கெஞ்சியும் வாழாதே
தூங்கினால் காதிலே ஞாபகம் பேசுதோ
பிடித்ததும் ஒரு நாள் பிடிக்காமலும் போகலாம்
இன்றைய உலகில் யாதும் யாவரும் சில காலம் தான்
வலிகளுக்குள்ளேயும் வழியைத் தேடி வாழ்பவள் தான் பெண்
காலம் சிலரின் முகத்திரைகளை கிழிக்கும்
முகமூடி கிழியும் வரை அனைவரும் நல்லவர்களே
பலமும் அன்புதான் பலவீனமும் அன்புதான்
எதையும் மறக்காது மறந்தது போல் நடிப்பவள் பெண்
உண்மைக்கு சற்று திமிர் அதிகம் தான்
எல்லாம் சில காலம்
அமைதியைத் தேடாதே அமைதியாய் மாறி விடு
இதயம் வலித்தாலும் சிரி! அது உடைந்தாலும் சிரி!
நேசிப்பது அழகு, நேசிக்கப்படுவது பேரழகு
பேசும் வார்த்தையை விட பேசாத மௌனத்திற்கு அதிகம் அர்த்தம் உண்டு!
பயத்தின் முடிவே, வாழ்க்கையின் ஆரம்பம்.
சுமையற்ற வாழ்க்கை, சுவையற்றுப் போகும்!
அழகென்பது மனதுதானே தவிர முகமல்ல!
ஊடலில்லையெனில் காதலும் கசக்கும்.
அழுகை கூட அழகு தான்! குழந்தைகளிடம் மட்டும்.
தேடலின் மதிப்பு கிடைக்கும் வரைக்கும் தான்.
வாய்ப்புகளை தேடி அலையாதே! வாய்ப்புகளை உருவாக்கு!
விடியல் என்பது கிழக்கிலல்ல! நம் உழைப்பில்.
கற்றுத்தெளிவது கல்வி! அறிந்து தெளிவது அறிவு.
போலியான புன்னகையை விட திமிரானக் கோபமே மேல்.
தனியே நின்றாலும் தன்மானத்தோடு நிற்பதில் தவறில்லை.
சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவைக்கு சமம்.
இல்லாத போது தேடல் அதிகம். இருக்கின்ற போது அலட்சியம் அதிகம்.
ஆயிரம் உறவுகள் தரமுடியாத பலத்தை ஒரு அவமானம் பெற்றுத் தரும்!
கடந்தவை கசப்பான நிகழ்வுகளென்றால் அதை மீண்டும் ருசிக்க நினைக்காதே!
நினைப்பதை சரியாக நினைத்தால் நடப்பதும் சரியாகவே நடக்கும்.
அழகாய் பேசும் பல வரிகளை விட அன்பாய் பேசும் ஒற்றை வரிக்கே உணர்வுகள் அதிகம்!
வாழ்வின் ரகசியங்களை கற்றுத்தரும் வகுப்பறை - தனிமை.
துணியாத வரை வாழ்க்கை பயங்காட்டும், துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்.
தேடலில் தொடங்கி, எதையோ தேடித் தேடியே முடிகின்றது வாழ்க்கை!
இரவு காட்டில் இரைதேடும் சிறகில்லா பறவை (நினைவு)
அதிகமான ஆட்டம் குறுகிய காலமே என்று உணர்த்துகிறது சுற்றும் பம்பரம்.
எதிர்பார்த்து வாழும் வாழ்க்கை ஏமாற்றத்திலே!
நீயாக மாறுவதே..நிரந்தர மாற்றம்.
எதையும் விட்டு விடாதே. கற்றுக் கொள்!
காசு பேசுகிறது. மனிதன் ஊமையாகிறான்.
உன்னை நீ நம்பு!
பொறுமை பொக்கிஷம் போன்றது.
வாழ்க்கை குறுகியது ஆனால் அழகானது.
சேமிப்பு இல்லையென்றால் உழைப்பும் வீணே.
உழைப்பே உயர்வுக்கு வழி!
நல்ல மனசாட்சி தான் கடவுளின் கண்.
கோபம் ஆபத்தை தரும்.
சிறந்த பாடத்தை சரியான நேரத்தில் கற்பிக்க தவறாத ஒரே ஆசான் காலம்!
ஆணவம் அழிவை தரும்!
வாழ்க்கையை ரசிப்பவர்களே நீண்ட காலம் வாழ்கின்றனர்.
யாரோடும் பகை இல்லாமல் புன்னகைத்து வாழுங்கள்!
நேரமின்மை என்பது நாகரீகமான புறகணிப்பு.
செல்வாக்கு இருந்தாலும் சரியானதை செய்யுங்கள்!
அதிக கோபம் உடல் நலத்திற்கு தீங்கானது.
சங்கடமாய் இருந்தாலும் சத்தியமே பேசுங்கள்!
நம்பிக்கையை கொண்டு மனிதனின் வீரத்தை நிர்ணயித்து விடலாம்.
தீர்வை விரும்புங்கள். தர்க்கத்தை வளர்க்காதீர்கள்!
எப்போதும் தன்னம்பிக்கை மட்டும் இழக்கக்கூடாது.
உறுதி காட்டுங்கள். பிடிவாதம் காட்டாதீர்கள்!
அமைதியான கடலில் ஒவ்வொருவரும் சிறந்த மாலுமியாக இருக்கிறார்கள்.
உரியவர்களிடம் சொல்லுங்கள். ஊரெல்லாம் சொல்லாதீர்கள்!
அதிக ஓய்வு அதிக வேதனையை தரும்.
பேசி தீருங்கள். பேசியே வளர்க்காதீர்கள்!
எல்லாம் உண்டு! ஆனால், எதுவும் நிரந்தமில்லை!
லட்சியம் இருக்குமிடத்தில் அலட்சியம் இருக்காது.
நம்பிக்கையே சகல நோய்களுக்கும் செலவில்லாத ஒரே மருந்தாகும்.
அளவான உணவு உடலுக்கு நலம். அளவோடு பழகு உறவுக்கு நலம்.
அளவற்ற உழைப்பே மேன்மை தரும்.
நாளை கனவு போன்றது.. இன்றைய நிஜத்தினை ரசித்திடு.
நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்.
ஊமையாகவே இருந்து விடாதே. வாழ்க்கை உன்னை ஊனமாக்கிவிடும்.
அனுபவம் அன்பாக சொல்லி தருவதில்லை.
வானிலையை விட அதிவேகமாக மாறுகின்றது மனிதனின் மனநிலை.
வலிகளை ஏற்றுக்கொண்டால் தான் வாழ்க்கை அழகாகும்.
What's Your Reaction?