சுவையான பிரட் சாட் செய்வது எப்படி? | Bread Chaat Recipe in Tamil

மாலை நேர பசியைப் போக்க 30 நிமிடங்களில் மிக எளிதாகச் செய்யக்கூடிய சுவையான 'பிரட் சாட்' (Bread Chaat). புதினா மற்றும் புளி சட்னியுடன் கூடிய இந்த அசத்தலான சிற்றுண்டியை வீட்டிலேயே செய்யும் முறை.

Sep 3, 2026 - 21:31
 0  1
சுவையான பிரட் சாட் செய்வது எப்படி? | Bread Chaat Recipe in Tamil
Prep Time 10 min
Cook Time 20 min
Serving 4
Difficulty Intermediate

Ingredients

  • 1/2 cup கடலை மாவு
  • 1/2 cup மாதுளம் பழம் விதைகள்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 4 பச்சை மிளகாய்
  • 2 பல் பூண்டு
  • 2 சிறு துண்டு இஞ்சி
  • 1 tsp சோள மாவு
  • 2 1/2 tsp காஷ்மீரி மிளகாய் தூள்
  • 1 tsp ஆம்சூர் தூள்
  • 2 tsp சாட் மசாலா
  • 1/2 tsp ஓம விதைகள்
  • 1/2 tsp சீரக தூள்
  • 1/2 tsp மல்லி தூள்
  • 2 tsp கசூரி மேத்தி
  • 1/2 tsp பிளாக் சால்ட்
  • 1/2 tsp இஞ்சி பொடி
  • 2 tsp பொடித்த வெல்லம்
  • 2 எலுமிச்சம் பழம்
  • 10 விதைகளை நீக்கிய பேரிச்சம்பழம்
  • 1 துண்டு புளி
  • தேவையான அளவு பிரட்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு ஓமப் பொடி
  • தேவையான அளவு கொத்தமல்லி
  • தேவையான அளவு புதினா
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு நெய்
  • தேவையான அளவு தண்ணீர்

Directions

பிரட் சாட்

செய்முறை

  • முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா, பூண்டு, இஞ்சி, மற்றும் பேரிச்சம் பழத்தை நறுக்கி, புளியை சுமார் அரை கப் அளவு தண்ணீரில் கரைத்து வைத்து, மற்றும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது புளி சட்னியை அரைக்க ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் இரண்டு பச்சை மிளகாய், ஒரு சிறு துண்டு இஞ்சி, ஒரு கை அளவு புதினா, ஒரு கை அளவு கொத்தமல்லி, நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சம்பழசார், கால் மேஜைகரண்டி அளவு உப்பு, மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு கொத்தமல்லி சட்னியை செய்வதற்கு ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பேரிச்சம் பழத்தை போட்டு அதை நன்கு ஒரு கரண்டியின் மூலம் கலந்து விட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை வேக விடவும்.
  • ஐந்து நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் புளி தண்ணீரை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் இரண்டு நிமிடம் வரை வேக விடவும்.
  • இரண்டு நிமிடத்திற்க்கு பிறகு அதில் சீரக தூள், அரை மேஜைகரண்டி காஷ்மீரி மிளகாய் தூள், அரை மேஜைகரண்டி உப்பு, ப்ளாக் சால்ட், மல்லி தூள், பொடித்த வெல்லம், மற்றும் இஞ்சி பொடியை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
  • அடுத்து அதில் கொஞ்சம் தண்ணீரை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் மூன்று நிமிடம் வரை வேக விடவும்.
  • மூன்று நிமிடத்திற்க்கு பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதை கீழே இறக்கி வைத்து சற்று நேரம் ஆற விடவும்.
  • அது ஆறியதும் அதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது பூண்டு மற்றும் இஞ்சியை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் ஆக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு ஒரு bowl லை எடுத்து அதில் கடலை மாவு, சோள மாவு, அரை மேஜைகரண்டி அளவு நாம் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், இரண்டு மேஜைகரண்டி காஷ்மீரி மிளகாய் தூள், அரை மேஜைகரண்டி உப்பு, ஆம்சூர் தூள், ஒரு மேஜைகரண்டி சாட் மசாலா, ஓம விதைகள், கசூரி மேத்தி, மற்றும் கொஞ்சம் எலுமிச்சை சாறை சேர்க்கவும்.
  • பின்பு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு மாவாக்கி வைத்துக் கொள்ளவும். (மாவு ரொம்ப தண்ணீராகவோ அல்லது ரொம்ப திக்காகவோ இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்).
  • இப்பொழுது ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ரெண்டு மேஜைகரண்டி அளவு நெய் சேர்த்து அதை உருக விடவும்.
  • நெய் உருகியதும் அதில் ஒவ்வொன்றாக எடுத்து நாம் கரைத்து வைத்திருக்கும் மாவு கலவையில் முக்கி pan னில் போட்டு நன்கு இருபுறமும் டோஸ்ட் செய்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் நான் உரித்து வைத்திருக்கும் மாதுளை விதைகளை போட்டு அதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், ஒரு கை அளவு புதினா, மற்றும் கொத்தமல்லியை சேர்க்கவும்.
  • பின்பு அதில் சுமார் அரை மேஜைகரண்டி அளவு சாட் மசாலாவை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
  • இப்பொழுது நாம் டோஸ்ட் செய்து எடுத்து வைத்திருக்கும் பிரட்டுகளை ஒரு தட்டில் வைத்து அதன் மேலே நாம் செய்து வைத்திருக்கும் கொத்தமல்லி சட்னியில் இருந்து ஒரு மேஜைகரண்டி அளவு எடுத்து வைத்து அதை நன்கு தடவி விடவும்.
  • அதைத்தொடர்ந்து நாம் செய்து வைத்திருக்கும் புளி சட்னியில் இருந்து ஒரு மேஜைகரண்டி அளவு எடுத்து வைத்து அதை தடவி விடவும்.
  • அடுத்து அதன் மேலே நாம் செய்து வைத்திருக்கும் மாதுளை பழ விதை மற்றும் வெங்காய கலவையில் இருந்து சுமார் ஒரு கை அளவு எடுத்து வைக்கவும்.
  • பின்பு அதன் மேலே ஒரு சிட்டிகை அளவு சாட் மசாலா மற்றும் ஓமப் பொடியை தூவி அதை சுட சுட பரிமாறவும்.
பிரட் சாட்

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0