ஆரோக்கியம் தரும் வெஜிடபுள் சாலட் !!
ஹெல்தி வெஜிடபிள் சாலட், சில நிமிடங்களில்!
1. தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் 10
கேரட் 1
வெள்ளரிக்காய் 1
குடமிளகாய் 1
வேர்க்கடலை 50g
தக்காளி 1
கொத்த மல்லி தழை
உப்பு
மிளகு தூள்
தயிர்
எலும்பிச்சைச்சாறு
2. செய்முறை:

காரட், வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி,குடமிளகாய் ஆகிய அனைத்து பொருட்களையும் கழுவி சுத்தம் செய்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும், முதல் நாள் இரவு ஊற வைத்த வேர்க்கடலை இவை அனைத்தையும் ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து சிறிதளவு தயிர் அல்லது எலும்பிச்சைச்சாறு சேர்த்து நன்கு கிளறி மிளகு தூள் மற்றும் மல்லி இலை சேர்த்து நன்கு கலந்து பரிமாறலாம். மேலும் இதனை தாயார் செய்து அரை மணி நேரம் கழித்து சாப்பிட்டால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும் சுவையான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபுள் சாலட் தயார்.
What's Your Reaction?






