பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு நாளை (07.05.2025) தொடக்கம்..!

மாணவர்களின் வசதிக்காக முன்கூட்டிய மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்க உள்ளது.

May 6, 2025 - 18:44
 0  2
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு நாளை (07.05.2025) தொடக்கம்..!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 8-ம் தேதி வெளியாக உள்ளது. 12-ம் வகுப்புக்கு பிறகு உயர்கல்வியில் என்ன படிப்பில் சேரலாம் என மாணவர்கள் ஆலோசித்து வருகின்றனர். இந்நிலையில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு நாளை தொடக்க உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 450-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன, பி.இ., பி.டெக்., பி.ஆர்க். பி.பிளான் ஆகிய படிப்புகளில் மொத்தம் 2 லட்சத்துக்கு அதிமான என்ஜினியரிங் படிப்பு இடங்கள் உள்ளன. இதற்காக 2025-26-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை தொடங்குகிறது.

சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்கக வளாகத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நடப்பு கல்வி ஆண்டுக்கான என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவை தொடங்கி வைக்கிறார்.மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 8-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் மாணவர்களின் வசதிக்காக முன்கூட்டிய மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.