ரோட்டுக்கடை தண்ணி சால்னா - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..

ப்போதும் இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஒரே மாதிரியான சுவையில் சட்னி, சாம்பார், குருமா என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில், அதுவும் ரோட்டுக்கடையில் விற்கப்படும் ஏதாவது சைடு டிஷ் போன்று செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் ரோட்டுக்கடை தண்ணி சால்னாவை செய்யுங்கள்.

Mar 24, 2025 - 15:50
 0  2
ரோட்டுக்கடை தண்ணி சால்னா - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
Prep Time 10 min
Cook Time 15 min
Serving 5
Difficulty Easy

இந்த சால்னா பரோட்டா, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். இது தவிர, இட்லி, தோசையுடனும் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த சால்னா செய்வதற்கு ஈஸியாக இருக்கும். ஒருமுறை இந்த சால்னாவை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். அந்த அளவில் இது ருசியாக இருக்கும்.

உங்களுக்கு ரோட்டுக்கடை தண்ணி சால்னாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரோட்டுக்கடை தண்ணி சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Directions

1. தேவையான பொருட்கள்:

வதக்கி அரைப்பதற்கு...

 * எண்ணெய் - 2 டீஸ்பூன்

 * பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்

* வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்

 * முந்திரி - 20 * கசகசா - 1 டேபிள் ஸ்பூன்

* கிராம்பு - 3

* கல்பாசி - 1

* ஏலக்காய் - 2

 * பட்டை - 2 சிறிய துண்டு

 * சோம்பு - 2 டீஸ்பூன்

* சீரகம் - 1 டீஸ்பூன்

* மிளகு - 1 டீஸ்பூன்

* பூண்டு - 10 பல்

 * இஞ்சி - 4 இன்ச்

* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)

 * தக்காளி - 3 (நறுக்கியது)

* புதினா - 15 இலைகள்

* தேங்காய் - 1/2 மூடி

 * தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

*எண்ணெய் - 2 டீஸ்பூன்

* ஏலக்காய் - 2 

* அன்னாசிப்பூ - 2 இதழ்

 * பட்டை - சிறிய துண்டு

* கல்பாசி - சிறிது

* கிராம்பு - 3

 * மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

 * மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

* தண்ணீர் - தேவையான அளவு

 * மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

 * உப்பு - சுவைக்கேற்ப

* கொத்தமல்லி - சிறிது

2. செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொட்டுக்கடலை, வேர்க்கடலை, முந்திரி, கசகசா சேர்த்து வறுக்க வேண்டும். * பின் அதில் கிராம்பு, கல்பாசி, ஏலக்காய், பட்டை, சோம்பு, சீரகம், மிளகு சேர்த்து வறுக்க வேண்டும். * அதன் பின் அதில் பூண்டு, இஞ்சி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். * பின்பு அதில் தக்காளியை சேர்த்து, அத்துடன் புதினாவை சேர்த்து வதக்க வேண்டும். * பின் நறுக்கிய தேங்காய் துண்டுகளை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். * பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். * பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஏலக்காய், அன்னாசிப்பூ, பட்டை, கல்பாசி, கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். * பின் தீயைக் குறைத்துவிட்டு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும். * பின்பு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, சால்னாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, மல்லித் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து, எண்ணெய் பிரியும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ரோட்டுக்கடை தண்ணி சால்னா தயார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.