கோவையில் கொந்தளித்த ஐடி ஊழியர்கள்.. திடீரென பறிபோன வேலை.. என்ன நடந்தது?
தமிழ்நாட்டின் முக்கிய தொழில்நகரமான கோவையில் பல்வேறு இளைஞர்கள் வெவ்வேறு துறைகளில் பயணியாற்றி வருகின்றனர். குறிப்பாக ஐடி நிறுவனங்களில் ஏராளமானோர் பணியாற்றுகின்றனர். அதற்குதகுந்தார்போல், எண்ணற்ற ஐடி நிறுவனங்களும் கோவையில் அதிகம் முதலீடு செய்துள்ளனர். இதற்கிடையில், ஊழியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அந்த ஐடி நிறுவனம் திடீரென மூடப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவை சார்ந்த தகவல் தொழில்நுட்பு நிறுவனம் Focus Edumatics நிறுவன ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
Focus Edumatics எனும் தனியார் ஐடி நிறுவனம் கோவை ஆர் எஸ் புரம் மற்றும் சுங்கம் பகுதியில் செயல்பட்டு வந்தது. அமெரிக்காவைச் சார்ந்த இந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்த நிறுவனத்தில் திடீரென எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஊழியர்கள் யாரும் இனி யாரும் பணிக்கு வரவேண்டாம் என மெயில் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், ஊழியர்கள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மூன்று மாத கால சம்பள தொகையை பெற்றுத் தர வேண்டும் எனவும், 5 ஆண்டுகளுக்கும் மேல் பணி புரிந்து வருபவர்களுக்கு செட்டில்மெண்ட், கிராசுவிட்டி போன்றவற்றை முறையாக பெற்றுத் தர வேண்டும் என கேட்டு பணியாற்றிய ஊழியர்கள் கூட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.
அப்போது, அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ஊழியர்கள் கூறுகையில், எந்த ஒரு முன்னறிவிப்பு இன்றி கம்பெனியை மூடப்பட்டதாகவும், இந்த மாதம் முழுவதும் பணிபுரிந்து உள்ளதாகவும், எங்களது சம்பளம் குறித்து தகவல் எதுவும் கூறவில்லை என்றும், எங்களுக்கு தரப்பட வேண்டிய பண பலன்களும் அது பற்றியும் எதுவும் பேசவில்லை. இந்த நிறுவனத்தை மூடினாலும் வேறு ஒரு பெயரில் செயல்படுத்தி மீண்டும் எங்களுக்கு பணி வழங்க வேண்டும் என கூறி ஆர்பாட்டம் நடத்தினர்
மேலும், இந்த நிறுவனத்தின் இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்கள் யாரும் இல்லை எனவும், பணியாளர்கள் மற்றுமின்றி உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் என அனைவரையும் நீக்கி விட்டதாகவும், கடந்த வெள்ளிக்கிழமை வரை பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இரவில் அனைவருக்கும் நிறுவனம் மூடப்படுவதாக கூறப்பட்டதாக கூறுகின்றனர்.
அலுவலகத்தில் பணிபுரிவோர் 1000க்கும் மேற்பட்டோர் உள்ளிட்ட வீட்டிலிருந்து வேலைபார்ப்பவர்கள் என பலரையும் நீக்கியுள்ளதாக கூறுகின்றனர். நிறுவனத்தின் இமெயில் உள்ளிட்ட அனைத்தையும் நீக்கிவிட்டதாகவும், அதேபோன்று முறையான பணி அனுபவ சான்றிதழ் வழங்கவில்லை எனவும் கூறி ஆர்பாட்டம் நடத்தினர்.
What's Your Reaction?






