Adai Dosai : புரதச்சத்து நிறைந்த காலை உணவு! அடை தோசை!

Adai Dosai: புரதச்சத்து நிறைந்த காலை உணவு. அடை தோசை செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

Jan 30, 2025 - 11:22
 0  9

1. தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு - கால் கப்

உளுத்தம் பருப்பு - கால் கப்

கடலை பருப்பு - கால் கப்

பச்சை அரிசி - அரை கப்

இட்லி அரிசி - அரை கப்

காய்ந்த சிவப்பு மிளகாய் - 8

கடுகு - அரை ஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்

சின்ன வெங்காயம் - ஒரு கப்

இஞ்சி - ஒரு துண்டு

கருவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - தேவையான அளவ

உப்பு - தேவையான அளவு

2. செய்முறை

செய்முறை


ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு மூன்றையும் தண்ணீரில் எட்டு மணி நேரம் ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.

மற்றொரு பாத்திரத்தில் பச்சை அரிசி மற்றும் இட்லி அரிசியை சேர்த்து தண்ணீரில் எட்டு மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவேண்டும்.

மற்றொரு பாத்திரத்தில் காய்ந்த சிவப்பு மிளகாயை ஊற வைத்துக்கொள்ளவவேண்டும். காரத்திற்கு ஏற்ப மிளகாயை சேர்த்து கொள்ளவேண்டும்.

நன்றாக ஊறிய அரிசி, பருப்பு, மிளகாய் ஆகிவற்றை சேர்த்து மாவாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

பின்னர், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு. பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, உப்பு, மஞ்சள் தூள், ஆகிவற்றை நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் வருத்தவற்றை மாவில் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.

தயாரான மாவை தோசை கல்லில் ஊற்றி சிறிதளவு எண்ணெய் சேர்த்து இருபக்கமும் பொன்னிறம் வரும் வரை வேகவைக்கவேண்டும்.

சூடான அடை தோசை தயார். அடை தோசையை சாம்பார் சட்னி உடன் பரிமாறவேண்டும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.