மொறுமொறுப்பான முப்பருப்பு வடை ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...!

Different vada recipe in tamil

Mar 27, 2025 - 15:25
 0  1
மொறுமொறுப்பான முப்பருப்பு வடை ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...!

மொறுமொறுப்பான முப்பருப்பு வடை ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...!

தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு தின்பண்டம் என்றால் அது வடைதான். ஒவ்வொரு முறை டீக்கடையை கடக்கும் போதும் நமது கண்கள் நிச்சயம் வடையைத் தேடும். அந்த அளவிற்கு வடை நமக்கு மிகவும் பிடித்தமான தின்பண்டமாகும். வடை எவ்வளவுதான் சுவயானதாக இருந்தாலும் அது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்பது மறுக்க முடியாத உண்மை. பெரும்பாலான வீடுகளில் உளுந்து வடை அல்லது பருப்பு வடை செய்வார்கள். பருப்பு வடை என்பது பொதுவாக கடலைப் பருப்பை ஊற வைத்து அதில் செய்வார்கள். இது ஆரோக்கியமான வடையாக இருந்தாலும் அதை கூடுதல் ஆரோக்கியமானதாக மாற்ற அதில் வேறு சில பொருட்களை சேர்க்கலாம். "

 தென் தமிழ்நாட்டில் பருப்பு வடையை ஒரு பருப்புக்குப் பதிலாக மூன்று பருப்புகள் சேர்த்து முப்பருப்பு வடை என்று செய்வார்கள். இந்த பருப்பில் கடலைப் பருப்புடன் உளுந்தம் பருப்பு மற்றும் துவரம் பருப்பு சேர்த்து வடை செய்வார்கள். இதில் சேர்க்கும் வேறு சில பொருட்கள் இந்த வடைக்கு மிகவும் தனித்துவமான சுவையைக் கொடுக்கிறது. இந்த பதிவில் சூப்பரான முப்பருப்பு வடையை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

உளுத்தம்பருப்பு - ஒரு கப்

கடலைப்பருப்பு - ஒரு கப்

 துவரம்பருப்பு - ஒரு கப்

 மிளகு - 1 ஸ்பூன்

 சீரகம் - 1 ஸ்பூன்

 பெரிய வெங்காயம் – 1

  கொத்தமல்லி - சிறிதளவு

 கறிவேப்பிலை - ஒரு கொத்து

 இஞ்சி - சிறிய துண்டு

 சோம்பு - அரை டீஸ்பூன்

 காய்ந்த மிளகாய் - 10

 நெய் - 2 ஸ்பூன்

  உப்பு - தேவையான அளவு

  எண்ணெய் - தேவையான அளவு

 செய்முறை:

 பருப்பு வகைகளை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை நன்றாக வடித்து விட்டு தனியாக வைக்கவும். " பின்னர் அதில் சோம்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரவென அரைத்து கொள்ளவும். - பின்னர் வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, நெய் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். - கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி, வடைகளாக தட்டிப் போட்டு, நன்கு வேகவிட்டு பொரித்து எடுக்கவும். - சூப்பரான முப்பருப்பு வடை ரெடி. - மாலை ஈரத்தில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்க இது மிகவும் எளிதா மற்றும் ஆரோக்கியமான தின்பண்டமாக இருக்கும்.


What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0