ப்ளீஸ்... கலர் பாத்து ‘டூத் பேஸ்ட்’ வாங்குங்க ...
ஆதிகாலத்தில, வேப்பங்குச்சில, ஆலங்குச்சில பல்லு விளக்குன நம்ம தாத்தா, பாட்டி எல்லாம் கல்லைய்யும் நறநற மென்னு சாப்பிட்டாங்க. ஆனா, நாம அப்படியா..? காலையில் எழுந்ததும் நம்மில் பெரும்பாலானவர்கள் முழிப்பது டூத்பேஸ்ட்களின் முகத்தில் தான். அத்தகைய டூத் பேஸ்ட்களை வாங்கும் போது, நிறமிருந்தால் சுவையில்லை, சுவையிருந்தால் மணமில்லை என்ற ரேஞ்சில் வாங்காமல், அதம் உண்மையான பலன்களைத் தெரிந்து கொண்டு வாங்குவது உத்தமம். விளம்பரங்களை மட்டும் பார்த்து விட்டு, அதை அப்படியே கடையில் வாங்கும் அன்பர்களே உங்களுக்காகத் தான் இந்த உபயோகமான செய்தி...
1. பட்டையா கலர் கோடு...
நாம வாங்கற டூத் பேஸ்ட் டுயூப்ல, கீழ பட்டையா கலர் கோடு ஒன்னு இருக்கும் பாத்திருக்கீங்களா..?
2. பச்சை கலரு சிங்குச்சா...
அந்தக் கோடுகள். பச்சை , ப்ளூ , சிவப்பு , கருப்பு போன்ற கலர்களில் தான் இருக்கும் .
3. அர்த்தம் என்னன்னா...
அந்த கலர்களின் அர்த்தமாகப்பட்டது...
பச்சை - இயற்கை
ப்ளூ - இயற்கை + மருத்துவ குணம்
சிவப்பு - இயற்கை + ரசாயன கலவை
கருப்பு - சுத்தமான ரசாயன கலவை .
4. கரெக்டா செலக்ட் பண்ணுங்க...
இனிமேலாவது, டூத் பேஸ்ட் வாங்கும் போது உங்களுக்கு தேவையானதை பார்த்து வாங்குங்கள். பெரும்பாலும், ப்ளூவும் பச்சையும் தான் சரியானா தேர்வாக இருக்க முடியும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
5. உங்களப் பத்தி தெரியும் பாஸூ....
உடனே குடு குடுன்னு ஓடி போய் , டூத் பேஸ்ட் எடுத்து " color bar " இருக்கானு செக் பண்ணுவிங்க இல்லாட்டி போன் பண்ணி வீட்ல இருக்கறவங்க கிட்ட செக் பண்ண சொல்லுவீங்களே ..!!! ஹி ஹி ஹீ ...எங்களுக்குத் தெரியாதா?
What's Your Reaction?