ஆரோக்கியம் நிறைந்த சுவையான மக்கானா பாயாசம்.., இலகுவாக செய்வது எப்படி?
பாயாசம் என்றாலே வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான ஒரு இனிப்பு. அந்தவகையில், சுவையான மக்கானா பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

அந்தவகையில், சுவையான மக்கானா பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Ingredients
- மக்கனா- 1 கப் பால்- 2 கப் குங்குமப்பூ- 5 இதழ் சேமியா- ½ கப் சர்க்கரை- 3 ஸ்பூன் நெய்- 2 ஸ்பூன் முந்திரி- 10 ஏலக்காய்- 2
Directions
செய்முறை:
முதலில் ஒரு வாணலில் மக்கனாவை மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்து அதில் பாதியை மிக்ஸி ஜாரில் பொடியாக அரைத்துகொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து கொதிக்கவைத்து அதில் வறுத்த மக்கனா மற்றும் சேமியா சேர்த்து கொதிக்கவைக்கவும்.
அடுத்து அதில் சர்க்கரை, அரைத்த மக்கனா பொடி, பாலில் ஊறவைத்த குங்குமப்பூ சேர்த்து கொதிக்கவைக்கவும்.
இறுதியாக இதில் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான மக்கானா பாயாசம் தயார்.
What's Your Reaction?






