கோலார் சட்னி கர்நாடகா ஸ்டைல் ரெசிபி... இந்த சட்னி இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும்...!

karnataka style kolar chutney Recipe

Dec 30, 2024 - 16:09
 0  4
கோலார் சட்னி கர்நாடகா ஸ்டைல்  ரெசிபி... இந்த சட்னி இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும்...!

 கோலார் சட்னி கர்நாடகா ஸ்டைல்

  ரெசிபி... இந்த சட்னி இட்லி,

தோசைக்கு சூப்பராக இருக்கும்...! 

இட்லி, தோசைக்கு எப்பவுமே சைடிஷ் அப்படினா சட்னி சாம்பார் தான். என்ன செய்யலாம் என்ன செய்யலாம்னு யோசிச்சு யோசிச்சே பலருக்கு மன அழுத்தமே வந்துவிடும் போல. என்ன செய்வது கடைசியில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து தான் ஏதாவது ஒரு சட்னி செய்வோம். முன்னெல்லாம் பக்கத்து வீட்டில் சிறிது குழம்பு சட்னி வாங்கி வந்து சாப்பிடுவோம். இப்போது பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என தெரிந்து வைத்திருப்பதே பெரிது. இட்லி, தோசைக்கு புதிய சட்னி செய்ய ஆசைப்பட்டா இந்த கோலார் சட்னியை தாராளமா ட்ரை பண்ணலாம். சரி கோலார் தங்கத்திற்கு மட்டும் பேமஸ் இல்ல, சட்னிக்கும் பேமஸ் தான். வாங்க கர்நாடகா ஸ்பெஷல் கோலார் சட்னி எப்படி செய்வது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்

தேவையான பொருட்கள்:

 கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

 வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்

  பூண்டு - 5 பல்

  தக்காளி - 1

 சீரகம் - ½ டீ ஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு

 வரமிளகாய் - 5-7(காரத்திற்கு ஏற்ப)

  புளி - பெரிய நெல்லிக்காய் அளவு

  எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

  உப்பு - தேவையான அளவு

 தாளிக்க: - எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

 கடுகு - ¼ டீ ஸ்பூன்

  கடலைப்பருப்பு - ¼ டீ ஸ்பூன்

  உளுந்தம் பருப்பு - ¼ டீ ஸ்பூன்

  கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை: - பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ளவும். - நன்கு பழுத்த தக்காளி பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். - முதலில் ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய விடவும். - எண்ணெய் சூடானதும் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் வேர்க்கடலை சேர்த்து - நன்றாக சிவக்கும் வரை வறுத்து கொள்ளவும்

- பொன்னிறமாக வறுபட்ட கடலை பருப்பு மற்றும் வேர்க்கடலையை தனியாக ஒரு பாத்திரத்திற்கு மாற்றி ஆற விடவும். - கடாயில் மீதம் இருக்கும் அதே எண்ணெயில் 5 வெள்ளை பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். - நறுக்கிய தக்காளி பழத்தை சேர்த்து நன்கு வதக்கவும். - தக்காளி நன்றாக வதங்கி மசிந்து வரும் போது அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து வதக்கவும். - அதனுடன் கருவேப்பிலை, மற்றும் நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து கிளறிவிடவும். - பின் காரத்திற்கு ஏற்ப வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். - அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு நிமிடம் வதக்கினால் போதுமானது. - பின் அடுப்பை அணைத்து வதக்கியவற்றை ஆற விடவும். - அடுத்து மிக்ஸி ஜாரில் வறுத்து வைத்த பொருட்களை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் இடையிடையே தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும். - அதே கடாயை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் சேர்க்கவும். - எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும். - அதனுடன் கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகவ வறுக்கவும். - அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் அரைத்து வைத்த சட்னி சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கோலார் சட்னி ரெடி!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow