தாஜ்மஹாலுக்கு பின்னால் இப்படி ஒரு கதை இருப்பது உங்களுக்கு தெரியுமா? தாஜ்மஹாலை பற்றி இதுவரை நீங்கள் அறியாத சில சுவாரசியமான தகவல்கள்!

தாஜ் மகால் (Taj Mahal), இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அதிசயங்களில் ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது.

Jul 27, 2023 - 10:25
Oct 8, 2024 - 10:42
 0  9
தாஜ்மஹாலுக்கு பின்னால் இப்படி ஒரு கதை இருப்பது உங்களுக்கு தெரியுமா? தாஜ்மஹாலை பற்றி இதுவரை  நீங்கள் அறியாத சில சுவாரசியமான தகவல்கள்!
தாஜ்மஹால்(Taj Mahal)

                          காதலின் சின்னம் என்று சொல்லப்படும் இந்த தாஜ்மஹாலை கட்டி 350 வருடங்கள் கடந்து விட்டன. இருப்பினும் இதனுடைய அழகு, பொலிவு, ஆச்சரியங்கள் ஒரு துளி கூட இன்றளவும் குறையவில்லை. தாஜ்மஹால் என்று சொன்னதும் நம் நினைவிற்கு வருவது காதல். அடுத்து நினைவிற்கு வருவது ஷாஜஹான், மும்தாஜ். காதலின் சின்னமாக நிற்கும் இந்த தாஜ்மஹாலை கட்டியதற்கு காரணமாக இருந்த மும்தாஜ், ஷாஜகானுக்கு எத்தனையாவது மனைவி, மும்தாஜ் இறந்த பின்புதான் தாஜ்மஹாலை கட்டத் தொடங்கினார்களா. அப்படி என்றால் தாஜ்மஹாலை கட்டி முடிப்பதற்கு முன்பு மும்தாஜின் சடலம் எங்கு எப்படி பாதுகாக்கப்பட்டது. இந்த கதையின் ஹீரோ ஷாஜகானுக்கு நேர்ந்த சோகமான இறுதி முடிவு தான் என்ன. என்பதை பற்றிய சில சுவாரசியமான தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்ளவே இந்த பதிவு

 

                             ஜஹாங்கீர் மன்னருக்கு மொத்தமாக நான்கு மகன்கள். அதில் ஒருவர்தான் ஷாஜகான். ஜஹாங்கீருக்கு அடுத்து மொஹலாய ஆட்சியை யார் பிடிப்பது என்ற பிரச்சினை வந்தபோது தன்னுடைய உடன் பிறந்த மற்ற மூன்று சகோதரர்களையும் கொன்று, ஆட்சியை பிடித்தவர் தான் ஷாஜகான். ஷாஜஹான் ஆட்சியை தன்னுடைய சிறுவயதிலேயே பிடித்துவிட்டார்.

                         அரசராக இருந்த ஜாஜகான், மும்தாஜை சந்தித்த முதல் மார்கத்திலேயே காதல் வலையில் விழுந்து விடுகின்றார். மும்தாஜை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற முடிவுக்கும் வந்து விடுகின்றார். இருவருக்கும் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால் திருமணம் நடக்கவில்லை. இடைப்பட்ட காலத்தில் ஷாஜஹானுக்கு வேறு ஒரு திருமணமும் நடந்து விடுகின்றது.

           

               முகலாய மன்னர்களின் இந்த ஷாஜகான் மிகப்பெரிய மன்னராக பேசப்பட்டவர். இந்தியாவிலேயே அதிகப்படியான படைபலமும் பணபலமும் கொண்ட மன்னர் என்ற பெருமை இவருக்கு உண்டு. ஆக அரசியல்ரீதியாக மற்ற நாடுகளுடன் சண்டை வரும்போது, தன்னுடைய ஆட்சிக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதால் போர் செய்யக் கூடிய நாடுகளில் இருக்கும் இளவரசிகளை திருமணம் செய்துகொண்டு சுமூகமாக சண்டையை முடித்துக் கொள்வார்கள். இதனால், ஷாஜகான் அரசியல் ரீதியாக பல திருமணங்கள் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். 

            மும்தாஜ் ஷாஜகானுக்கு முதல் மனைவி கிடையாது. மும்தாஜை திருமணம் செய்த பின்பும் ஷாஜஹான் இன்னும் பல திருமணங்களை செய்து கொண்டார் என்பதையும் இந்த இடத்தில் நாம் பதிவு செய்து கொள்ள வேண்டும். எத்தனை திருமணங்களை ஷாஜகான் செய்து கொண்டாலும், தன்னுடைய உயிருக்கு உயிரான மனைவியாக, காதலியாக நினைப்பது மும்தாஜை மட்டும்தான்.

ஷாஜஹானுக்கும் மும்தாஜுக்கு மொத்தமாக 14 குழந்தைகள் பிறக்கின்றது. இந்த 14 ஆவது குழந்தை பிறக்கும் சமயத்தில் தான் பிரசவ வேதனையில் மும்தாஜ் அவர்கள் உயிரிழக்கிறார்கள். 14வது குழந்தை நல்லபடியாக பிறந்து விட்டது. ஆனால் மும்தாஜ் உயிருடன் இல்லை.

                      இந்த 14வது குழந்தை ஆக்ராவில் பிறக்கவில்லை. ஷாஜகான் ஒரு போருக்காக மத்திய பிரதேசத்தில் இருக்கக்கூடிய புர்கான்பூர் என்னும் நாட்டிற்கு செல்லும் சமயத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்கின்றது. மும்தாஜ் தன்னுடைய உயிரை விட்ட இடம் மத்திய பிரதேசத்திலுள்ள இந்த இடம் தான். ஆக்ராவில் இருந்து பலநூறு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

தன்னுடைய மனைவியை இழந்த ஷாஜஹானுக்கு அதிகப்படியான மன உளைச்சல் ஏற்பட்டது. தன்னுடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்ததாக நினைத்து சோகத்திலேயே பல மாதங்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். மும்தாஜ் தன் உயிரை விடும் போது அவர்களுக்கு வயது 39. ஷாஜஹானுக்கு வயது 40.

                         மும்தாஜ் தன் உயிரை விட்ட புர்கான்பூரிலேயே புதைக்கப் படுகின்றார். ஒரு வருடம் போர் நடந்து கொண்டிருக்கின்றது. போரின் இறுதியில் ஷாஜகான் வெற்றியும் அடைகின்றார். அதன் பின்பு மும்தாஜுக்கு ஆக்ராவில் தாஜ்மஹால் கட்ட வேண்டும் என்ற முடிவையும் எடுக்கின்றார் ஷாஜகான்.

                      ஆக்ராவிலிருந்து பல கிலோ மீட்டர் தூரத்தில் புதைக்கப்பட்டிருக்கும் தன்னுடைய மனைவியின் உடலை எடுத்து ஒரு தங்கப் பெட்டியில் வைத்து ஆக்ராவிற்கே எடுத்து செல்கிறார்கள். தாஜ்மஹாலை கட்ட வேண்டும் என்ற வேலையே இப்போது தான் தொடங்குகின்றது. அதுவரைக்கும் மும்தாஜின் உடலை தாஜ்மஹாலுக்கு அருகிலேயே, அதாவது எந்த இடத்தில் தாஜ்மஹால் கட்ட வேண்டும் என்று முடிவு எடுத்தார்களோ, அந்த இடத்திற்கு அருகில் மும்தாஜை இரண்டாவது முறையாக புதைத்து வைக்கிறார்கள். தாஜ்மஹாலை கட்டத் தொடங்கும் வேலை ஆரம்பித்தாகிவிட்டது. மொத்தமாக தாஜ்மஹாலை கட்டி முடிப்பதற்கு 22 வருடங்கள் ஆனது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

                          பல நாடுகளிலிருந்து தொழில் நுட்ப வல்லுநர்கள் வந்து, பல நாடுகளிலிருந்து பிரத்தியேகமான பொருட்களை வரவழைக்க வைத்து, மொத்தமாக 22 ஆயிரம் பேர் இந்த தாஜ்மஹாலை கட்டுவதற்காக வேலை செய்துள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் தாஜ்மஹால் கட்டுவதற்கு 1000 யானைகள் பயன்படுத்தப்படுகின்றது. இதை கட்டி முடித்த பின்பு, இந்த தாஜ்மஹாலின் வேலைப்பாடுகளுக்காக கட்டப்பட்ட கட்டைகளை அவிழ்ப்பதற்கு ஒரு வருடம் ஆகி இருக்கின்றது என்றால் பாருங்கள். 22 வருடங்கள் கழித்து தாஜ்மஹால் கட்டி முடிக்கப்பட்ட பின்பு, புதைக்கப்பட்ட மும்தாஜை மீண்டும் தோண்டி எடுத்து தாஜ்மஹாலுக்கு நடுவே வைத்து புதைத்து உள்ளார்கள். ஷாஜஹான் தன்னுடைய காதலிக்காக கட்டிய கோட்டையில் தன்னுடைய காதலியை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்து விட்டார். எத்தனை வயதானாலும் எத்தனை திருமணங்களை செய்தாலும் ஆசை கொண்ட மனைவியின் மீது மட்டும் காதல் ஒரு துளி அளவும் ஷாஜகானுக்கு குறையவில்லை என்பதை இதன் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது.

                            சரி அடுத்து வந்த சில வருடங்களில் ஷாஜகானுக்கு நேர்ந்த நிலை என்ன தெரியுமா. ஷாஜஹானுக்கு மொத்தம் 14 குழந்தைகள். அதாவது ஷாஜகானுக்கும் மும்தாஜ் பிறந்த குழந்தைகள் மட்டும் 14. இந்த 14 குழந்தைகளில் ஒருவர் தான் அவுரங்கசீப். அவுரங்கசீப்புக்கு நாட்டை ஆள வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. ஆனால் தன்னுடைய தந்தையான ஷாஜஹான் அதற்கு இடம் கொடுக்கவில்லை. காலங்கள் கடந்தது. காலத்தின் கட்டாயம் ஷாஜஹானுக்கு முதுமை வந்துவிட்டது. உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. உடல்நிலை சரியில்லாத ஷாஜகானை அவுரங்கசீப் ஆக்ராவில் உள்ள ஒரு கோட்டையில் சிறை வைத்து விடுகின்றார்.

                        இந்த ஆக்ரா கோட்டையின் வழியாக ஒரு சிறு துலையின் மூலம் தாஜ்மஹாலை பார்த்துக் கொண்டே தனது பத்து வருட வாழ்க்கையை கழித்து, இறுதியாக அதே இடத்தில் தன்னுடைய உயிரையும் விடுகின்றார் ஷாஜகான். ஷாஜகான் இறந்த பின்பு இவரது உடலை அவுரங்கசீப் எடுத்துக் கொண்டுபோய் மும்தாஜின் சமாதிக்கு பக்கத்திலேயே அடக்கம் செய்து விடுகிறார்கள். இந்தத் தாஜ்மஹால் கட்டி 350 வருடங்கள் கடந்து விட்டன. இந்த 350 வருட காலகட்டத்தில் தாஜ்மஹாலுக்கு உள்ளே இருக்கும் பாதி சொத்து அழிக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. அதாவது அவுரங்கசீப்புக்கு அடுத்தபடியாக வந்த மன்னர்கள், அதன் பின்பு முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி என்று கொஞ்சம் கொஞ்சமாக தாஜ்மஹாலில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் சுரண்டப்பட்டது.

                             இருப்பினும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலகட்டத்தில் தான் இந்த தாஜ்மஹால் பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று, பிரிட்டிஷ் அரசு செலவுகளை ஏற்றுக்கொண்டு தாஜ்மஹாலை புதுப்பிக்கவும் செய்தது. இத்தனை பிரச்சனைகளைத் தாண்டி இன்றளவும் உலக அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மஹால் நிற்கிறது என்றால் அதற்கு காரணம், ஷாஜகான் மும்தாஜின் மீது கொண்டுள்ள காதல் தானோ என்னமோ. நினைக்கும் போதே வியப்பாகத்தான் உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow