மணமணக்கும்... ஆட்டுக்கால் குழம்பு - Tamil Recipes
Tamil Recipes

மணமணக்கும்... ஆட்டுக்கால் குழம்பு - Tamil Recipes
வார விடுமுறை நாட்களில் வீட்டில் ஏதாவது ஒரு
வித்தியாசமான சுவையை கொண்ட ரெசிபியை
எப்போதும் ட்ரை செய்வீர்களா? அப்படியானால் இந்த
வாரம் ஆட்டுக்கால் வாங்கி குழம்பு வையுங்கள். இந்த
ஆட்டுக்கால் குழம்பு உடலுக்கு மிகவும் நல்லது.
ஆட்டுக்கால் சூப் பிடிக்காதவர்கள், அதைக் கொண்டு
குழம்பு செய்து சாப்பிடும் போது, விரும்பி
சாப்பிடுவதோடு, உடலுக்கும் நல்லது. இந்த
ஆட்டுக்கால் குழம்பு இட்லி, இடியாப்பம்
போன்றவற்றுடன் சாப்பிட பிரமாதமாக இருப்பதோடு,
சாதத்துடனும் சாப்பிடலாம். அந்த அளவில் ருசியாக
இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* ஆட்டுக்கால்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 2 டம்ளர்
வறுத்து அரைப்பதற்கு..
. * மிளகு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
முந்திரி - 8 டீஸ்பூன்
* தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
".." தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை – 2
* அன்னாசிப்பூ - 1
* கிராம்பு – 4
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஆட்டுக்காலை நன்கு கழுவிக் கொள்ள
வேண்டும். * பின்னர் குக்கரில் ஆட்டுக்காலை எடுத்து,
அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப
உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், 2 டம்ளர் நீரை ஊற்றி
கலந்து, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 6 விசில்
விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். * பின் ஒரு
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, சோம்பு,
கசகசா, முந்திரி சேர்த்து நல்ல மணம் வரும் வரை
வறுத்து, அத்துடன் துருவிய தேங்காயையும் சேர்த்து 1
நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். *
பின்பு வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு,
நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும். * பிறகு அதே
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னசிப்பூ,
சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். Advertisement * பின்
அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து
நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். * அடுத்து
அதில் பொடியாக நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு
பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போய், தக்காளி
மென்மையாகும் வரை வதக்க வேண்டும். * பின்பு
அதில் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து, குறைவான
தீயில் வைத்து, கிளறி விட வேண்டும். * அடுத்து
குக்கரில் உள்ள விசில் போனதும், குக்கரைத் திறந்து,
அதில் வதக்கிய தக்காளி வெங்காயத்தை சேர்த்து,
அத்துடன் அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து
கிளறி, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு
சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 6 விசில்
விட்டு இறக்க வேண்டும். * விசில் போனதும் குக்கரைத்
திறந்து, மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, 5 நிமிடம்
குழம்பை கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி
இறக்கினால், சுவையான ஆட்டுக்கால் குழம்பு தயார்.
What's Your Reaction?






