Vidamuyarchi Review : அதே பில்டப் அதே ஏமாற்றம்..தொடரும் தமிழ் சினிமாவின் சாபம்...விடாமுயற்சி பட விமர்சனம்
Vidamuyarchi Review In Tamil : மகிழ் திருமேனி இயக்கி அஜித் த்ரிஷா நடித்து இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள விடாமுயற்சி பட விமர்சனத்தை பார்க்கலாம்

விடாமுயற்சி
உலகெங்கிலும் உள்ள அஜித் ரசிகர்களுக்கு பிப்ரவரி 6 ஆம் தேதியான இன்றுதான் தீபாவளி பொங்கல் எல்லாம். துணிவு படத்திற்கு பின் இரு ஆண்டுகள் கழித்து அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று திரையரஙகில் வெளியாகியுள்ளது.
ஹாலிவுட்டில் 1997 ஆம் ஆண்டு வெளியான பிரேக்டவுன் படத்தின் கதையை தழுவி உருவாகியுள்ளது விடாமுயற்சி. அர்ஜூன் கயல் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். 12 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பின் தான் இன்னொரு நபரோடு உறவில் இருப்பதாகவும் அர்ஜூனிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் தெரிவிக்கிறார் கயல். கயலை அவள் பெற்றொர் வீட்டில் விட்டுவர போகும் வழியில் அவரை யாரோ கடத்திச் செல்கிறார்கள். எந்த வித தடமும் இல்லாமல் தனது மனைவியை தேடிச் செல்லும் அர்ஜூன் பல போராட்டங்களை எதிர்கொள்கிறார். கயலை கடத்தியது யார். அவளை அர்ஜூன் காப்பாற்றினாரா ? இருவரும் சேர்ந்தார்களா பிரிந்தார்களா என்பதே விடாமுயற்சி படத்தின் கதை.
விடாமுயற்சி விமர்சனம்
வழக்கமான எந்த வித ஆடம்பரமும் இல்லாமல் படம் தொடங்கியதும் கதை தொடங்கிவிடுகிறது. அஜித்திற்கு என்று தனியாக மாஸான அறிமுக காட்சி ஏதும் இல்லை என்றாலும் சவாதீகா பாடல் ஒரு நல்ல ஓப்பனிங் மூடை செட் செய்கிறது.
முதல் பாதி
முதல் அரை மணி நேரத்திற்கு அர்ஜூன் கயல் யார் இவர்கள் எப்படி சந்தித்துக் கொண்டார்கள் , ஏன் பிரிகிறார்கள் என்பதை முன்னும் பின்னுமான காட்சிகளில் சொல்லப்படுகிறது. இடையிடையில் ஆரவ் , ரெஜினா , அர்ஜூன் என அடுத்தடுத்த கதாபாத்திரங்கள் அறிமுகமாகின்றன. ஏற்கனவே படத்தின் கதை தெரிந்தது என்பதால் த்ரிஷா காணாமல் போய் படம் கொஞ்சம் விறுவிறுப்பாக மாற நாம் பொறுமை காக்க வேண்டியிருக்கிறது. மொழி தெரியாத நாட்டில் தனி நபராய் அஜித் தனது மனைவியை தேடி அலையும் காட்சிகள் அடுத்தடுத்து தொடர்கின்றன. நாம் எதிர்பார்த்து காத்திருந்த ட்விஸ்ட் வைத்து இண்டர்வல் ப்ளாக் விடுகிறார்கள்.
இரண்டாம் பாதி
முதல் பாதியில் யார் வில்லன் என்கிற கேள்வியோடு தொடரும் கதை இரண்டாம் பாதியில் வில்லன்களின் நோக்கம் என்ன என்பதை மையமாக வைத்து தொடர்கிறதும். இனிமேலாவது படம் கொஞ்சம் சூடு பிடிக்கும் என நம்பி பொறுமை காத்து செகண்ட் ஆஃப் வரை வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம். மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு கடைசியில் படத்தை முடிக்கிறார்கள்.
என்ன மைனஸ் ?
ஒரு கணவன் மனைவிக்கு இடையில் ஒரு காலத்தில் அழகான காதல் இருந்தது. அந்த காதல் முடியப்போகும் தருவாயில் எதிர்பாராத ஒரு சம்பவம் அவர்களின் காதலை மீண்டும் உயிர்பிப்பதே விடாமுயற்சி படத்தின் கதை. ஆனால் இதனை திரைக்கதையில் கொண்டு வருவதில் மகிழ் திருமேனி சறுக்கியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். முதல் பாதியில் அஜித் த்ரிஷா இடையிலான காதல் காட்சிகள் அழகாக எழுதப்பட்டிருந்தாலும் ஒட்டுமொத்த படத்துடன் ஆடியன்ஸை ரிலேட் செய்ய போதுமானதாக இல்லை.
மேலும் வில்லன் யார் ? அவர்களின் நோக்கம் என்ன என்பது தான் இந்த படத்தில் ஆர்வத்தை தூண்டக்கூடிய அம்சம். அதை முடிந்த அளவிற்கு கடைசி வரை சுவாரஸ்யமாக மெயிண்டெயின் செய்திருந்தால் நிச்சயமாக செம த்ரில்லிங்கான அனுபவமாக இருந்திருக்கும். ஆனால் அதையும் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர். அர்ஜூன் , ரெஜினா , ஆரவ் , பார் ஓனர் , போலீஸ் , த்ரிஷா என அத்தனை கதாபாத்திரங்கள் படத்தில் இருந்தும் எந்த கதாபாத்திரத்திற்கு வெயிட்டான ஒரு ரோல் கிடையாது. ரெஜினா மற்றும் அர்ஜூனி ஃபிளாஷ்பேக் காட்சிகள் கதைக்கு பொருத்தமே இல்லாததாக உள்ளன.
நடிப்பு
அஜித்தின் தோற்றம் தொடங்கி குட்டி குட்டி ரியாக்ஷன் வரை படம் முழுவதும் ரசிக்கும்படியாக நாடித்துள்ளார். அர்ஜூன் , ரெஜினாவின் நடிப்பும் அபாரம்.
படத்தில் உண்மையாக ஹாலிவுட் தரத்தில் இருந்தது என்றால் அது ஓம்பிரகாஷின் ஒளிப்பது தான். முதல் ஷாட்டில் இருந்தே ஏதோ வெஸ்டர்ன் படம் பார்ப்பது போல் அவ்வளவு கிளாஸ். ஸ்டண்ட் காட்சிகள் மற்றொரு பாராட்டிற்குரிய அம்சம்.
அனிருத்தின் பின்னணி இசை இல்லை என்றால் படம் நம் பொறுமையை உச்சகட்டில் சோதிக்கும்.
What's Your Reaction?






