காதலரை மணந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.. - Keerthy Suresh wedding
Keerthy Suresh Wedding picture
காதலரை மணந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்..
கோவா: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது காதலர்
ஆண்டனியை இன்று அதாவது டிசம்பர் 12ஆம் தேதி
கரம் பிடித்தார். இவரது திருமணம் கோவாவில்
நடைபெற்றது.
இவர்களது திருமணம் மிகவும் கோலாகலமாகவும்
பிரமாண்டமாகவும் நடைபெற்றது. தென்னிந்திய
திரைப்பிரபலங்கள், இந்தித் திரைப்பிரபலங்கள் என பலர்
இவர்களின் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
திருமணம் முடிந்த கையோடு திருமணத்தில்
எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது
இன்ஸ்டார்கிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
புகைப்படத்தினைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி
வருகின்றனர். மேலும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மொத்தம் 8
புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் தாலி
கட்டும்போதும், தாலி கட்டிய பின் மற்றும் தாலி
கட்டும் முன் என மண மேடையில் எடுத்த
புகைப்படங்கள் மட்டும் மொத்தம் 6 புகைப்படங்கள்
ஆகும்.
இதுமட்டும் இல்லாமல், தனது செல்லப்பிரானியுடனும்
ஒரு புகைப்படம் எடுத்து அதனையும் பகிர்ந்துள்ளார்.
"கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் மாப்பிள்ளை போல பட்டு
வேட்டி, சட்டையில் விஜய்.. கோவாவில்
கொண்டாட்டம்!" தாலி கட்டும்போது மிகவும்
மகிழ்ச்சியாக சிரித்தபடி, தனது காதலர் ஆண்டனியைப்
பார்க்கும் கீர்த்தி சுரேஷ், தாலி கட்டி முடித்த பின்னர்,
அண்டனியை உடனே கட்டிப்பிடித்துக் கொண்டார்.
ஆண்டனியும் கீர்த்தி சுரேஷ் உச்சந்தலையில் முத்தம்
வைத்தார்.
What's Your Reaction?