வட்டலாப்பம் - Tamil Recipes
Vattalaappam Recipe in tamil

வட்டலாப்பம் - Tamil Recipes
வட்டலாப்பம் என்பது இஸ்லாமிய வீடுகளில் திருமண விசேஷங்கள் ரம்ஜான் பண்டிகை போன்றவற்றின் போது பாரம்பரியமாக செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகையாகும். இது தேங்காய் பால் முட்டை மற்றும் உலர் பழங்கள் சேர்த்து தயாரிக்கப்படும். பல்வேறு சத்துக்கள் மற்றும் சுவை நிறைந்த வட்டலப்பம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
முட்டை - 10,
ஏலக்காய் பொடி- சிறிது,
முந்திரி பருப்பு - 15,
கிஸ்மிஸ்-15,
சீனி - 1/4 படி( 400கிராம்)
தேங்காய் பால் - 1 டம்ளர்
நெய் - 1 தேக்கரண்டி.
செய்முறை: முதலில் 10 முட்டையை மிக்ஸியில் அடித்து எடுத்து வைத்து கொள்ளவும். சீனியை மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும். தேங்காயில் கட்டி பால் 1 டம்ளர் எடுத்து வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அடித்து வைத்துள்ள முட்டை, பொடித்து வைத்துள்ள சீனி, தேங்காய் பால், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் நெய் தடவி இந்த கலவையை ஊற்றவும்.
பின்னர் குக்கரில் 300 மிலி தண்ணீரை சூடுபடுத்தி அதில் கலவை உள்ள பாத்திரத்தை மூடி போடாமல் வைத்து குக்கரை மூடி விசில் வரும் போது சிம்மில் வைத்து 30 நிமிடம் வேக வைக்கவும். 30 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து ஆவி அடங்கிய பின்னர் திறக்கவும். ஒரு கத்தியை வைத்து குத்தி பார்த்தால் ஒட்டாமல் வரும். சரியாக வெந்துள்ளது என அறிந்து கொள்ளலாம். முந்திரி திராட்சை மேலே தூவி பரிமாறவும். சுவையான வட்டலப்பம் தயார்.
What's Your Reaction?






