Vastu Tips: வீடுகளில் பறவைகள் கூடு கட்டுவது நல்லதா? கெட்டதா? வாஸ்து சாஸ்திரம் கூறுவதென்ன?

சகுன சாஸ்திரத்தில் பறவைகளுடன் தொடர்புடைய சில மங்களகரமான மற்றும் மங்களகரமற்ற அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், வீட்டில் பறவை கூடு காட்டினால் சுபமா? அசுபமா? என்பதை குறித்து ஜோதிட சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களை தெரிந்துகொள்ளலாம்.

Jan 24, 2025 - 14:31
 0  2
Vastu Tips: வீடுகளில் பறவைகள் கூடு கட்டுவது நல்லதா? கெட்டதா? வாஸ்து சாஸ்திரம் கூறுவதென்ன?
வேத சாஸ்திரத்தில் மரங்கள், விலங்குகள், செடிகள், கொடிகள் என அனைத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஜோதிட சாஸ்திரத்திலும் இவற்றிற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் நமது வீடுகளில் பறவைகள் கூடு கட்டுவதை பார்த்திருப்போம். அவை பொதுவாக ஜன்னல் ஓரம், கட்டிட இடுக்குகள், ஆள் புழக்கம் இல்லாத பகுதிகளில் பொதுவாக கூடு கட்டுகின்றன.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, வீட்டில் பறவைகள் அல்லது தேனீக்கள் கூடு கட்டுவது நமக்கு சில முக்கியமான சமிக்ஞைகளை அளிப்பதாக கூறப்பட்டுள்ளது. சகுன சாஸ்திரத்தில் பறவைகளுடன் தொடர்புடைய சில மங்களகரமான மற்றும் மங்களகரமற்ற அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், வீட்டில் பறவை கூடு காட்டினால் சுபமா? அசுபமா? என்பதை குறித்து வாஸ்து ஜோதிட சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களை தெரிந்துகொள்ளலாம்.

சிட்டுக்குருவி கூடு: வீட்டில் சிட்டுக்குருவிகள் கூடு கட்டுவது அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு மங்களகரமானது என ஜோதிடம் கூறுகிறது. சிட்டுக்குருவி கூடு கட்டும் வீட்டில், மகிழ்ச்சியும் செழிப்பும் ஏற்படும். வீடு ஆசீர்வதிக்கப்பட்டு, துரதிர்ஷ்டமும் அதிர்ஷ்டமாக மாறும்.

புறா கூடு: வீட்டில் புறா கூடு கட்டுவது வீட்டில் வசிப்பவர்களுக்கு பணம் வருவதற்கான அறிகுறியாகும். புறா லட்சுமி தேவியின் பக்தராகக் கருதப்படுகிறது. அதனால் தான் வீட்டில் புறா கூடு கட்டுவது மங்களகரமானது. புறா கூடு கட்டும் வீட்டில் செல்வமும் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும் என்பது நம்பிக்கை.

வீட்டிற்குள் வௌவால் வந்தால்?: வௌவால்கள் தனியாகவும் பாழடைந்த இடங்களிலும் வாழும் பறவைகள். ஒருவரின் வீட்டில் வௌவால் கூடு கட்டினால் அது அவருக்கு அசுபமாகவே கருதப்படும். வௌவால்கள் வீட்டுக்குள் வருவது நல்லதல்ல. எதிர்காலத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என அர்த்தம்.

தேன்கூடு: பல சமயங்களில் நம் வீட்டில் தேனீக்கள் கூடு கட்டுவது நல்லது அல்ல. உங்கள் வீட்டிலும் தேனீ கூடு இருந்தால் அதை உடனே அகற்றாவிட்டால் பெரிய விபத்தை ஏற்படுத்தும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0