ஒரு மஹாபாரத கதை – அடுத்தவர் வீட்டிற்கு சென்று சாப்பிடுவதற்கு முன்பு இதை தெரிந்து கொள்ளுங்கள்..!
Story of Shalya in Mahabharata in Tamil அவசியம் இல்லாமல் நாம் அடுத்தவர் வீட்டில் உண்ணுதல் கூடாது. அப்படி சாப்பிட்டால் சல்லியன் கதை தான். யாரு இந்த சல்லியன் தெரியுமா.. தெரியும் என்றால் மிக்க மகிழ்ச்சி தெரியாது என்றால் பதிவை தொடர்ந்து படியுங்கள்.. மஹாபாரதக் கதை தெரிந்தவர்களுக்கு சல்லியன் யார் என்று தெரிந்திருக்கும். ஆனால் எதற்காக அவன் கௌரவர்கள் பக்கம் சேர்ந்து அவர்கள் சார்பாக போர் புரிந்தான் என்பது பலருக்கும் வியப்பாக இருக்கும்.
சல்லியன், நகுலன்/ சகாதேவன் இருவருக்கும் தாய் மாமன். பாண்டவர் தந்தை பாண்டு மன்னனுக்கு இரு மனைவியர். மூத்தவள் குந்தி. அவளுக்குத் தர்மன், பீமன் அர்ஜுனன் என மூன்று புதல்வர். இரண்டாவது மனைவி மாத்தரி. அவளுக்கு நகுலன், சகாதேவன் என இரு புதல்வர்.
மாத்திரியின் உடன் பிறந்தவன் சல்லியன். அவன் பேராற்றல் படைத்தவன். வில்லாண்மையாலும் வாளாண்மையாலும் அவனை யாரும் வெல்ல இயலும். தேரோட்டத்திலும் வல்லவன்.
சல்லியனின் மிகப்பெரிய பலவீனம் அவனது பசி. பசி தாங்க மாட்டான். பசி வந்துவிட்டால், இடம் பொருள் எதையும் பார்க்க மாட்டான். சாப்பிட ஆரம்பித்து விடுவான்.
அந்த சல்லியன் தன மருமக்களுக்குப் போரில் உதவுவதற்காக தன பெரும்படைகளுடன் வந்து கொண்டிருந்தான்.
செய்தி அறிந்த துரியோதனன், எப்படியாவது சல்லியனைத் தனக்கு உதவியாக்கிக் கொள்ளுதல் வேண்டும் என்று எண்ணினான்.
சல்லியன் நெடுந்தூரம் வந்தமையால். அவனும் அவன் படைகளும் சோர்ந்து போயினர். படைவீரர்கள் தகத்தாலும் பசியாலும் துடிக்கலாயினர். நா உலர்ந்து நடை தளர்ந்தனர். நிழலே அருகில் எங்கும் தென்படவில்லை. தன படைகள் சோர்ந்து போவது கண்டு, சல்லியன் வேதனையுற்றான்.
எப்படியோ மேலும் சிறிது தூரம் முன்னேறினான். என்ன அதிசயம் வழியில் ஒரு பெரிய பந்தல் தென்பட்டது. அளவு கடந்த தன் படைகளுடன் தங்குவதற்கு ஏற்றபடி விசாலமாக அந்தப் பந்தல் இருந்தது. சிலர் வந்து சல்லியனையும், அவனது படை வீரராக்களையும் முகமன் கூறிப் பந்தலுக்குள் அழைந்த்துச் சென்றனர்.
சற்றுநேரத்தில் அறுசுவையுண்டி பரிமாறப்பட்டன. அனைவரும் உணவருந்தி விட்டு குளிர் நிழலில் இளைப்பாறினர். நண்பகலிலே. நண்பகலில் கிடைத்த விருந்து உபசாரம் கண்டா சல்லியன் வியப்பாலும் மகிழ்வாலும் பரவசமானான்.
இத்தகைய அறச்செயலைக் காலத்தினால் செய்த அறவோன் யார்? அவன் எதன் பொருட்டு இந்த அறச்செயலை மேற்கொண்டான்? என்று சல்லியன் சிந்தனையில் ஆழ்ந்தான். அந்த அறவோனை அவன் மனமும் வாயும், வாழ்த்திக் கொண்டே இருந்தது.
“இந்த அறச்செயல் செய்த அறவோனுக்கு என் உடல், பொருள், ஆவி அனைத்தும் உதவினாலும் கைம்மாறு ஆகாது!” என்று அவன் வாய் அவனை அறியாமல் உரக்கக் கூறிவிட்டது.
உடனே அதுகாறும் மறைந்திருந்த துரியோதனன், சல்லியனுக்கு முன்னே நின்றான். என்ன மாமா சௌக்கியமா? என்றான். திரும்பி பார்த்த சல்லியனுக்கு அதிர்ச்சி! துரியோதனா இது உன் கூடாரமா! இடம் அறியாமல் சோற்றை தின்று விட்டேன் என்று நொந்து கொண்டான்.
“மாமா! தங்கள் மருமகனாகிய நானே தங்களை உபசரிக்கும் இப்பேறு பெற்றேன். தாங்கள் தங்கள் உடல், பொருள், ஆவியும் எனக்கே தருவேன் என்கிறீர்கள் அல்லவா? வரப்போகும் போரில் எனக்குத் துணையாக நின்றால், அந்த உதவியே போதும். அதுவே நான் எதிர்பார்க்கும் கைம்மாறு” என்றார் துரியோதனன்.
விருந்துண்டு மகிழ்ச்சியில், தன்னை மறந்து கூறிய சொல், சல்லியனின் கடமைக்கு மாறாக அமைந்துவிட்டதே! மருமக்களுக்கு உதவுவதே மாமன் கடமை. இப்பொது அக்கடமையைச் செய்ய முடியாமல், தன வாய்மை தடுத்துவிட்டதே.
கடமையா? வாய்மையா? என்ற பட்டிமன்றம் நெடுநேரம் சல்லியன் மனதில் நிகழ்ந்தது. இறுதியில் வாய்மையே பெரிது என்று அவன் மனம் தீர்ப்பளித்து விட்டது.
நகுலன், சசதேவனுக்கு தாய்மாமன் ஆன போதும் துரியோதனின் குருச்சேத்திரப் போரில் கௌரவர்கள் தரப்பில் போரிட நேர்ந்தது.
தன் பெரும் படையுடன் துரியோதனனுக்குப் போரில் உதவி செய்ய அஸ்த்தினாபுரம் நோக்கிப் புறப்பட்டு விட்டான். துரியோதனன் இட்ட சோற்றுக்காக சல்லியன் கட்சி மாற வேண்டியதாகி விட்டது. ஆகவே தான் அவசியம் இல்லாமல் அடுத்தவர் வீட்டில் உண்ண கூடாது என்பார்கள்.
போர் நடந்து கொண்டிருக்கிறது துரியோதனன் பக்கம் இருக்கும் சல்லியனுக்கு போரின் பொது மதியம் நேரம் நல்ல பசி. சற்று தொலைவில் நல்ல நெய் வாசனையுடன் சமையல். உடனே அங்கு சென்று வயிறு முட்ட சாப்பிட்டுகிறான்.
அப்படி ஒரு உணவு, இதுவரை அம்மாதிரி நெய் மணக்க சாப்பிட்டதில்லை. சாப்பிட்டு எழுந்தான். கைகளை அலம்பியும் வாசனை போகவில்லை. இப்படிப்பட்ட சமையல் செய்தவரை பார்த்து பாராட்டி ஏதாவது கொடுக்க வேண்டும் என்று எண்ணி சமையல் கூடம் சென்று பார்க்கிறான்.
பயங்கர அதிர்ச்சி! அங்கெ முண்டாசு கட்டிக்கொண்டு கையில் கரண்டியுடன் கிருஷ்ணன் நிற்கிறார். கிருஷ்ணா நீயா! சமையல் செய்கிறாய் பிரமாதம்! நான் இதுவரை இப்படி ஒரு சாப்பாட்டை சாப்பிட்டதில்லை என்றார்.
இவ்வளவு பிரமாதமாக சமையல் செய்த உனக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே? கிருஷ்ணா! என்ன வேண்டும் கேள் என்றான். கிருஷ்ணன் எனக்கு எதுவும் வேண்டாம் உன் ஆசிர்வாதம் போதும் என்கிறான் இல்லை இல்லை ஏதாவது கேள் என வற்புறுத்த.
கிருஷ்ணன் புன்முறுவலுடன் நீ தேரை ஓட்டும் பொது ஒரு சக்கரத்தை பள்ளத்தில் இறக்கி ஒரு நொடியில் அதை மேலே ஏற்றி ஓட்டுவாயே? அதில் நீ தான் கைதேர்ந்தவன் அந்த வித்தையை எனக்கு எப்படி என்று சொல்லிக் கொடுப்பாயா? என கேற்கிறார்.
உடனே சல்லியன் அதை சொல்லி கொடுக்க கிருஷ்ணன் அதை கேட்டுக் கொண்டான். 17வது நாள் கர்ணன் அர்ஜுனன் யுத்தம். தேரோட்டியாக சல்லியன் செல்கிறான் அர்ஜுனனின் அம்புகள் சரமாரியாக வருகிறது.
கர்ணன் நாகஸ்திரத்தை விட அர்ஜுனனின் தலைக்கு குறி வைக்கிறான். அப்போது தான் சல்லியனுக்கு தான் செய்த தவறு புரிந்தது. நம்மிடம் கற்ற அந்த வித்தையை கொண்டு அர்ஜுனனை காப்பாற்றி விடுவானே? ஆஹா! கிருஷ்ணன் சாமர்த்தியமாக செயல்பட்டு விட்டானே என்று நினைத்து.
நடந்ததை கர்ணனிடம் சொல்வது உண்ட வீட்டுக்கு துரோகம் என்பதால் கர்ணனிடம் – கர்ணா நாகஸ்திரத்தை அர்ஜுனனின் மார்புக்கு குறி வைக்கச் சொல்ல,
னால வீரன் தலைக்குத்தான் குறி வைப்பான் என அடம்பிடித்து அப்பை விட அர்ஜுனனுக்குத் தேரோட்டியான கிருஷ்ணன் சாலியனிடம் கற்றுக்கொண்ட வித்தை மூலம் தேரை பள்ளத்தில் விழுந்து எழ வைக்க அர்ஜுனன் தலைப்பாகையை தட்டிச் சென்றது அஸ்திரம்.
சல்லியன் வியந்து போய் என் கண்ணை நானே குத்திக் கொண்டு விட்டேனே என நினைத்தான். சல்லியன் மீண்டும் கர்ணனை எச்சரிக்கை இரண்டாவது முறையாக இப்போதாவது மார்புக்கு குறி வைக்கச் சொல்ல கர்ணன் தன தாய்க்கு செய்த சத்தியத்தின் படி ஒருமுறைக்கு மேல் அதை விடுவதில்லை என்பதால், உன் வேலை தேரோட்டுவது மட்டுமே, அதை மட்டும் நீ கனவி என சல்லியனை பார்த்து சொல்கிறான்.
இம்முறை கர்ணனின் தேர்ச்சக்ரகம் சகதியில் மாட்டிக்கொண்ட போது, தேர் ஓட்டுவது மட்டுமே என் வேலை சகதியில் விழுந்தால் தூக்குவது என் வேலையல்ல எனக்கூறி கோபம் கொண்டு தேரை விட்டு இறங்கி சென்று விட்டான் சல்லியன்.
கர்ணனே சக்கரத்தை தூக்கிவிட முயற்சிக்கும் போது கிருஷ்ணன் உபதேசப்படி கர்ணன் மீது அம்புகள் பாய, கடைசி வயிறை கர்ணன் சாகாதிருக்க, அவன் தர்ம பலன்கள் அவனை சாகவிடாமல் தடுப்பதால் கிருஷ்ணன் – கர்ணன் செய்த தர்ம புண்ணியங்களை தனமாக பெட்ரா பின்பே மரணமடைந்தான்
விளக்கம்:
தேவையில்லாமல் அடுத்தவர் வீட்டில் உண்பது.. கூடாது. அதனால் தான் மக்களை கொடுத்த மருமகன் வீட்டிற்க்குச் சென்ட்ரல் கூட இன்றளவும் காய்கறி, அரிசி, இனிப்பு வகைகள் இவற்றை கொண்டு போய் கொடுத்த பின் தான் சாப்பிடுவது வழக்கம். வெற்றுக்கையை வீசிப் போய் சாப்பிட்டு கடன் படக்கூடாது.
What's Your Reaction?