New Year Rasi Palan 2025 in Tamil | புத்தாண்டு ராசிபலன்கள் 2025

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம்,கன்னி, துலாம்,விருச்சிகம்,தனுசு, மகரம்,கும்பம்,மீனம்

Dec 31, 2024 - 18:37
Dec 31, 2024 - 18:37
 0  24
New Year Rasi Palan 2025 in Tamil | புத்தாண்டு  ராசிபலன்கள் 2025

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தமிழ் புத்தாண்டு ராசிபலன் பற்றி பார்க்கலாம். பொதுவாக, ஒவ்வொரு நாளும் நமக்கு என்ன மாதிரியான சூழல் இருக்கும் என்பதை அதாவது, இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்வோம். அதேபோல், இந்த ஆண்டுக்கான ராசிபலன்கள் பற்றியும் தெரிந்துகொள்ள நினைப்போம், எனவே, அந்த வகையில் இப்பதிவில் தமிழ் புத்தாண்டு அன்று 12 ராசிகளுக்கும் உரிய ராசிபலன் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.

தமிழ் வருடங்களில் முப்பத்தெட்டாவது வருடமான குரோதி வருடம் முடிந்து 39 -வது வருடமான விசுவாசுவ ஆண்டு பிறக்கிறது. எனவே, இந்த வருடம் அனைவருக்கும் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க.

Puthandu Palangal 2025 Mesham in Tamil

இந்த ஆண்டு மேஷ மேஷ ராசிக்காரர்களுக்கு வேலை  மற்றும் தொழில் சம்மந்தமான பயணம் காணப்படும். பண ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். சில காரியங்களில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் நல்ல லாபம் கிடைக்கூடும். ஆனால், குடும்பத்தை பொறுத்தவரை குடும்பத்தில்  பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது

Puthandu Palangal 2025 Rishabam in Tamil:

இந்த ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. உங்கள் வியாபாரத்தில் நல்ல லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். வேலை  மற்றும் தொழில் சம்மந்தமான பயணம் காணப்படும். இந்த பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும்

Puthandu Palangal 2025 Mithunam in Tamil:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு, வேலை மற்றும் சொந்த தொழில் சம்மந்தமாக வெற்றி உண்டாகும். பணியிடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு ஏற்படக்கூடும். இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். செப்டம்பர் மாதம் வரை உங்களுக்கு சிக்கல்கள் இருந்துகொண்டே இருக்கும். அதன் பிறகு, நன்மையே நடக்கும்

New Year Rasi Palan 2025 Kadagam in Tamil

இந்த ஆண்டு கடக ராசிக்காரர்களுக்கு வேலை சம்மந்தமான பயணம் அதிகமாக இருக்கும். இந்த பயணங்கள் உங்களுக்கு முன்னேற்றத்தையும் நல்ல பலன்களையும் அளிக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு சில பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எதிலும் முதலீடு செய்வதற்கு முன்பு ஒன்றிற்கு இரண்டு நன்கு யோசித்து கவனமாக முதலீடு செய்ய வேண்டும். பணத்தை முறையாக கையாள வேண்டும். இல்லையென்றால் பண இழப்பு ஏற்படக்கூடும்.

New Year Rasi Palan 2025 Simmam in Tamil:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு வேலை தொடர்பான மாற்றங்கள் உண்டாகக்கூடும். இடத்திற்கு ஏற்றவாறு நீங்கள் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். பணியிடத்தில் நீங்கள் செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

New Year Rasi Palan 2025 Kanni in Tamil:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு, வேலை மற்றும் தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவு அதிகமாக வரும். உங்கள் சேமிப்பு உயரும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். இருந்தாலும் உடல் ஆரோக்கியம் மற்றும் குடும்ப சம்மந்தப்பட்ட விஷயங்களால் கவனமாக இருப்பது நல்லது.

New Year Rasi Palan 2025 Thulam in Tamil

இந்த ஆண்டு, துலாம் ராசிக்காரர்களுக்கு உங்களின் ஆற்றல் மற்றும் தைரியம் அதிகரிக்கக்கூடும். பணியிடத்தில் உங்கள் வேலையில் முன்னேற்றம் அடைவீர்கள். ஆரோக்கியத்தில் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மற்றவர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களால் மன கசப்பு உண்டாகும். உறவினர்களிடம் முடிந்தவரை அமைதியாக இருக்க பழகிக்கொள்ளுங்கள்.

New Year Rasi Palan 2025 Viruchigam Tamil:

இந்த ஆண்டு, விருச்சிக ராசிக்காரர்களுக்கு நிதிநிலமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்கள் தொழிலை பெரிய அளவில் கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் வரும். பணியிடத்தில் உங்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

Puthandu Palangal 2025 Dhanu Rashi Tamil:

 தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு, வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக வரும். உங்களிடம் இருக்கும் தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்ப உறவுகளில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

Puthandu Palangal 2025 Magaram in Tamil:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு, உங்களுக்கு நன்மை மற்றும் தீமை இரண்டும் கலந்து காணப்படுகிறது. குடும்ப சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. குறிப்பாக தொழில் சம்மந்தப்பட்ட விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். புதிய பொறுப்புகளும் புதிய வாய்ப்புகளும் உங்களை தேடி வரும். பல்வேறு விதமான சவால்களை நீங்கள் சந்திக்க நேரிடும். உங்களுக்கு நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

Puthandu Palangal 2025 Kumbam in Tamil:

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு, தொழில் மற்றும் வேலை சம்மந்தமான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் உங்களுக்கு நல்ல வாய்ப்புகளை பெற்று தரும். வேலை செய்யும் இடங்களில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

Puthandu Palangal 2025 Meenam in Tamil:

மீன ராசிக்காரர்க்களுக்கு இந்த ஆண்டு, உங்கள் வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்கள் உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் முக்கிய மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கருத்து வேறுபாட்டின் காரணமாக வீட்டில் மன கசப்பு உண்டாகும். எந்த சூழ்நிலையிலும் நீங்கள் உணர்ச்சிவசப்படமால் இருக்க வேண்டும். உங்கள் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow