வாசலில் கோலம் போடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா...
வீட்டைக் கூட்டி சுற்றுபுறத்தை அழகுபடுத்தி வாசலில் கோலமிடும் பண்பாடு நாள் தோறும் இடம் பெறுவது நம்ம தமிழ் நாட்டில் தான்! கோலமிடும் வீட்டில் மகாலெஷ்மி நிரந்தர வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம் வீட்டில் இருந்து யாரேனும் வெளியே கிளம்பும் முன்பாக கோலமிட வேண்டும்

கோலத்தில் புள்ளி கோடு போன்றவை போடும் போது சிறு தவறு ஏற்படும் போது காலினால் அழிக்க கூடாது கையால் அழிக்க வேண்டும்.
வீட்டின் வெளிமுற்றம் சமையல் அறை, பசுவின் கொட்டகை, துளசிமாடம், பூஜை அறை இவற்றில் கோலமிட வேண்டும்.
அதிகாலையில் அரிசி மாவினால் கோலமிடும் போது எறும்பு போன்ற சிறு உயிரிகளின் பசியைப் போக்கிய புண்ணியம் கிடைக்கும்
அதேபோல அமர்ந்தவாறும் கோலம் போடுதல் கூடாது வேலையாட்கலை வைத்தும் கோலம் போடுதல் கூடாது
சுபகாரியங்களின் போது இரண்டைக்கோடு வருவது போலவும் அசுபகாரியங்களின் போது ஒற்றைக்கோடு வருவது போல் போட வேண்டும்
கோலமிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
தமிழர்கள் இயற்கையை அரவணைத்து வாழக்கூடியவர்கள் இந்த பூமியின் மண்ணின் தன்மை கெடாமல் இருப்பதற்காக நாம் பசு சாணத்தைத் தெளிக்கிறோம்
பசு சாணத்தால் ஆன ஈரம், ஓசோன் வாயுப் படலம் சூழ்ந்திருக்கக்கூடிய சூரிய உதயத்திற்கு முன் இருக்கக் கூடிய காலகட்டத்தில் வாசல் தெளித்து பெருக்கும் போது பிராண வாயு அதாவது முழுமையான ஆக்ஸிஜன் சுத்தமான ஆக்ஸிஜன் நமக்கு கிடைக்கிறது.
மேலும் குணிந்து பெருக்குதல் குணிந்து கோலமிடுதல் இதெல்லாம் யோகாசனத்தில் ஒரு நிலையாக வருகிறது இடுப்புப் பகுதியை வளைத்து, கழுத்தை வளைத்து குனிந்து கரங்களால் மாவை எடுத்து கோலமிடுதல் என்பது யோகாசன அடிப்படையில் ஆரோக்கியமான குழலைச் தரக்கூடியது.
பசு சாணத்தாலோ, தண்ணீராலோ தெளிக்கும் போது வாசலில் இருக்கும் கிருமிகள் விலகுகிறது. இதனாலும் ஆரோக்கியமான சூழல் உருவாகிறது.
நமது இல்லத்திற்கு தினசரி தேவர்கள் வட்சுமி வருவதாக ஐதீகம் இருக்கிறது.
பச்சரிசி மாவு இடித்து அதில் கோலமிடும் போது நம்முடைய தயாள குணம் வெளிப்படும் விதமாக எறும்பு எல்லாம் சாப்பிடுவதற்கு தானம் தர்மம் செய்வது மாதிரியானதும் இருக்கிறது அதனால் கோலமிடுதல் என்பது ஒரு சடங்கு சம்பிரதாயம் எல்லாம் கிடையாது
What's Your Reaction?






