உலக குடை தினம்- வரலாற்றில் இன்று--பிப்ரவரி 10
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10ஆம் தேதி உலக குடை தினம் கடைபிடிக்கப்படுகிறது.குடை நம்மை சூரியனின் கதிர்வீச்சு மற்றும் மழையில் இருந்து காப்பாற்றுவதற்காக பயன்படுகிறது.

இந்த நாள் உலகின் மிக பயனுள்ள கண்டுபிடிப்பான குடையை போற்றுவதற்காக கொண்டாடப்படுகிறது.இத்தினத்தில் குடும்பத்தினர் உறவினர், நண்பர்களுக்கு அழகிய கலை நயமிக்க குடைகளை பரிசளிக்கிறார்கள்.
ஜான் பிராங்களின் எண்டர்ஸ்
உயிரியலில் மிகச் சிறப்பாக பங்காற்றிய ஜான் பிராங்க்ளின் எண்டர்ஸ் 1897ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார்.
இவர் பாக்டீரியாக்களின் வீரியத்தன்மை மற்றும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியின் ஆற்றல் குறித்து சில காரணிகளை ஆராய்ச்சி செய்து வந்தார். அதன்பிறகு தன் குழுவினருடன் இணைந்து பொன்னுக்கு வீங்கி அம்மை நோயை உண்டாக்கும் வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டார் அதைக் குணப்படுத்தும் நோய் எதிர்ப்புசக்தி மருந்தையும் கண்டறிந்தார்
போலியோ தடுப்பு மருந்து தயாரிப்புக்கு காரணமாக அமைந்த புதிய, ஆபத்து இல்லாத முறையிலான போலியோமையெலிட்டிஸ் வைரஸ்கள் உற்பத்திக்கான ஆய்விற்கு டி ஹெச்.வெல்லர் மற்றும் எஃப்சிராபின்ஸ் இருவருடன் இணைந்து இவருக்கு 1954ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இவர்களது ஆராய்ச்சி மூலம் விஞ்ஞானிகளால் போலியோ வைரஸ்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடிந்தது. இந்த ஆராய்ச்சி முறை, போலியோ மருந்து தயாரிப்புக்கு மட்டுமல்லாமல், பிற வைரஸ்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள உதவியது.
வைரஸ்கள் குறித்த ஆராய்ச்சியில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய நவீன தடுப்பு மருத்துகளின் தத்தை ஜான் பிராங்களின் எண்டர்ஸ் தனது 88வது வயதில் (1985) மறைந்தார்.
What's Your Reaction?






